தனிநபர் ஆக்கிரமிப்பால் பொதுமக்கள் அவதி!

தேனி பழனிசெட்டிபட்டி பகுதியில் உள்ள ஆஞ்சநேயா நகர் குடியிருப்பு பகுதியில் 300 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் அங்கு செல்லக்கூடிய பாதையை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து மறைத்துள்ளதால் அவ்வழியாக செல்லக்கூடிய பொதுமக்கள், குழந்தைகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவதாகவும், எனவே அப்பாதையை அகற்றிட மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை.