மேட்டுப்பாளையத்தில் உழைப்பாளர் மார்க்கெட் பகுதியில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது!!!

கோவை,கவுண்டம்பாளையம் ராமகிருஷ்ண மடம் மற்றும் CITU பொதுத் தொழிலாளர் சங்கம், நம்ம மேட்டுப்பாளையம் தோழர்கள் இணைந்து மேட்டுப்பாளையம் உழைப்பாளர் மார்க்கெட் மக்களுக்கு, பொது மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. கோவை, கவுண்டம்பாளையம் இராமகிருஷ்ண மடத்தின் தலைவர் சுவாமி பக்திகாமானாந்தா மகராஜ் அவர்களது ஒருங்கிணைப்பில் , சுவாமி மஹாம்பிகானந்தர் தலைமையிலான மருத்துவ குழுவினர், மருத்துவர் உதயகுமார், செவிலியர் ராணி பழனிச்சாமி, தன்னார்வலர்கள் திலீப், கண்ணன், கிஷோர், அஜய், யுவனேஷ் கலந்து கொண்டு மருத்துவ முகாமை சிறப்பாக நடத்தினர். இதில் 300 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.