தேர்தல் நேரத்தில் நாடகமாடும் தி.மு.க : மக்கள் புரிந்து கொள்வார்கள் - பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ!!!

தேர்தல் நேரத்தில் நாடகமாடும் தி.மு.க : மக்கள் புரிந்து கொள்வார்கள் - பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ!!! கோவை அவினாசி சாலையில் உள்ள பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்ற தேர்தல் அலுவலகத்தில் வருகின்ற 13 ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். அதில் பெண்கள் மட்டும் பங்கேற்கும் வாகனப் பேரணி நடைபெற உள்ளது. அது குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் அவர்கள் கூறும்போது:- பாராளுமன்றத் தேர்தலை ஒட்டி கட்சித் தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் தமிழகத்திற்கு வந்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். நிகழ்ச்சிகளுக்கு கட்சி நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். இந்நிலையில் வருகிற 13 - ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நீலகிரி, பொள்ளாச்சி, கோவை ஆகிய பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாகவும், நீலகிரி தொகுதியில் அவிநாசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் அந்தத் தொகுதியில் இருக்கின்ற பெண்கள், சுய உதவிக் குழு பெண்கள், தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தில் பயனாளிகளாக இருக்கின்ற பெண்கள் அவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், கோவையைப் பொறுத்த வரை அன்று மாலை 4 மணிக்கு பிரம்மாண்டமான மகளிர் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், 50,000 பெண்கள் கலந்து கொள்ள கூடிய பிரம்மாண்ட பேரணி மாநிலத் தலைவரும் கோவை வேட்பாளருடன் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ள உள்ளதாகவும், அன்று மாலை பொள்ளாச்சி தொகுதியில் அரங்க கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளதாகவும், இதற்கான ஏற்பாடுகள் தொடர்பான கூட்டங்கள் தான் இப்பொழுது நடைபெற்றதாகவும், முதலில் தேர்தல் களம் என்பது பாரதிய ஜனதா கட்சிக்கு ஒவ்வொரு நாளும் பலம் அதிகரித்து செல்வதாகவும், நேற்று திருவள்ளூர் பாராளுமன்றத்திற்கு சென்றதாகவும், வழக்கமாக குறிப்பிட்ட பகுதிகளில் மட்டுமே பாரதிய ஜனதா கட்சி இருக்கின்றது என்ற மாயை எல்லாமே இந்த தேர்தல் உடைத்துப் போட்டு விடும் என்றவர், அது கிராமப்புற, நகரப்புற பகுதிகளாக இருந்தாலும், படித்தவர்கள், படிக்காதவர்கள் ஏழைகள், பணக்காரர்கள் இளைஞர்கள், முதியவர்கள் என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் அத்தனை பேர் இடத்திலும் பிரதமர் மோடி மீதான அன்பு தமிழகத்தில் பா.ஜ.க வளர்ந்தாக வேண்டும் என்று மாநிலத் தலைவர் அண்ணாமலை எடுக்கின்ற முயற்சிக்கு மக்கள் ஆதரவு பெருகி கொண்டு இருக்கிறார்கள் எனவும், தேர்தல் களம் முழுமையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவாக இருக்கின்றது என்றும், சென்னையில் பிரதமர் மோடி பங்கேற்கும் ரோடு ஷோவில் வைக்கப்பட்டு இருந்த விளம்பர பதாகைகள் தேர்தல் ஆணையம் அகற்றப்பட்டது குறித்தான கேள்விக்கு ? தேர்தல் ஆணையம் நிறைய விதிமுறைகள் வைத்து உள்ளதாகவும், இந்த விதிமுறைகள் சில நேரங்களில் பார்த்தால் அதிகாரிகள் அதிகாரத்தை முழுக்க தங்களிடம் தான் கையில் இருப்பதாக, பேனர்களை தூக்கி எறிவது சில நேரங்களில் விதிமுறைகளை அவர்களே மதிக்காத மாதிரி நடந்து உள்ளதாகவும், பா.ஜ.க தேர்தல் அலுவலகம் அமைப்பதற்கு ஆறு நாட்கள் ஆனதாகவும், உரிய நேரத்திற்கான அனுமதி வழங்கவில்லை என்றும், வெளியில் விளம்பர பதவிகள் வைக்கக் கூடாது என்றனர். இதுவே அதே சாலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அலுவலகம் அமைத்து உள்ளதாகவும், ஆனால் பா.ஜ.க தேர்தல் அலுவலகம் முன்பு சாலை ஓரத்தில் பிளக்ஸ் போர்டு வைப்பதற்கு மூன்று நாட்கள் செய்ததாகவும், இதுபோன்று தேர்தல் ஆணையம் வழிமுறை கொடுத்தாலும் அதனை செயல்படுத்துகின்ற வருவாய்த்துறை அதிகாரிகள் சில நேரம் அனுமதி மறுத்து வருவதாகவும் குற்றம் சாட்டினார், இது சம்பந்தமாக அவர்கள் எங்கெல்லாம் இதுபோன்று செயல்படுகிறார்கள் என்று ஆதாரப்பூர்வமாக தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்து உள்ளதாகவும், உகாதி பண்டிகைக்கு முதல்வர் வாழ்த்து கூறியது குறித்தான கேள்விக்கு ? இன்றைய உகாதி தினத்தில் தெலுங்கு மொழி பேசும் அனைவருக்கும் தெலுங்கு வருடப்பிறப்பு வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொண்டு மாநிலத்தின் முதல்வர் தேர்தல் நேரத்தில் மட்டும் தி.மு.க வினருக்கு வியாதி உள்ளதாகவும், தேர்தல் வந்தா மட்டும் கோவிலுக்கு செல்வார்கள் என்றும், தேர்தல் நேரத்தில் மட்டும் நெற்றியில் விபூதி பூசுவார்கள் எனவும், கேட்டால் நாங்கல்லாம் கோயிலுக்கு செல்வோம் என எந்த வித்தியாசம் இல்லை என்று சொல்வார்கள் எனவும், தேர்தல் முடிந்த அடுத்த நிமிடம் பார்த்தால் உடனடியாக கோவிலுக்கு செல்வோர்களை திட்டுவார்கள், சாமியை தவறாக பேசுவதாகவும், இது தி.மு.க வினரின் நாடகம் என்றும், தற்பொழுது பார்த்தால் உகாதி பண்டிகைக்கு வாழ்த்து தெரிவிப்பதாகவும், மக்கள் கொண்டாடுகின்ற சித்திரை 1 க்கு, அனைவரிடத்திலும் தமிழ் புத்தாண்டு என்று கேட்டால் ? சித்திரை ஒன்று தான் என்று கூறுவார்கள். ஆனால் தி.மு.க வினர் தை ஒன்று தான் தமிழ் புத்தாண்டு என்று கூறியதாகவும், அதன் பிறகு அந்த தை 1 யை யாரும் கொண்டாடுவதில்லை என கூறியவர், சித்திரை 1 க்கு என்ன செய்யப் போகிறார் என்று பார்க்கலாம் என்றவர் மாநிலத்தின் முதல்வர் தீபாவளிக்கு வாழ்த்து கூறவில்லை என்றும் அது குறித்து சட்டம் பேரவையில் கேள்வி எழுப்பியதாகவும், சிறுபான்மை இனத்தவருக்கு வாழ்த்து கூறும் நீங்கள் கூறுங்கள் தப்பில்லை எங்கள் பிரதமர் கூட அனைவருக்கும் வாழ்த்து கூறுவதாகவும் ஒரு முதல்வர் மக்களின் அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து கூறுவதற்கு என்ன கஷ்டம் ? என கேள்வி எழுப்பிய அவர், ஏனென்றால் தேர்தல் நேரத்தில் நாடகம் என மக்கள் புரிந்து கொள்வார்கள் என தெரிவித்தவர்.