தேனியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள்பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை!!!

தேனியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள்பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜை!! அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் பிறந்தநாளை முன்னிட்டு தேனியில் பெரியகுளம் சாலையில் உள்ள பெத்தானாட்சி விநாயகர் கோவிலில் தேனி வடக்கு மாவட்ட செயலாளர் காசிமாயன் தலைமையிலும் அமைப்பு செயலாளரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமாகிய கதிர்காமு ,சுற்றுசூழல் அணி மாவட்ட செயலாளர் ராம் பிரசாத் முன்னிலையிலும் சிறப்பு பூஜைகளும் சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றனஅதனை தொடர்ந்து தேனி பெரியகுளம் சாலையில் உள்ள பொதுமக்களுக்கும் போக்குவரத்து பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது. மேலும் இந்த நிகழ்வில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட ஒன்றிய கிளை நிர்வாகிகள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.