மேட்டுப்பாளையத்தில் 11-4-2024 வியாழக்கிழமை ரம்ஜான் பெருநாள் பண்டிகை மிக சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது..

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இஸ்லாமியர்களின் புனித பண்டிகைகளில் ஒன்றான ரம்ஜான் பெருநாள் பண்டிகை மிக சிறப்பான முறையில் கொண்டாடப்பட்டது இதன் ஒரு பகுதியாக ஊட்டி சாலையில் அமைந்துள்ள ஈத்கா பெருநாள் திடலுக்கு மேட்டுப்பாளையத்தின் 25 பள்ளிவாசல்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று கூடி திரளாக வந்து சிறப்புத் தொழுகை நடத்தினர் இந்நிகழ்வில் வேலூர் பாக்கியாது சாலிஹாத் அரபுக் கல்லூரியின் முதல்வர் அப்துல் ஹமீது பாகவி அவர்கள் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினார் பெரிய பள்ளிவாசல் இமாம் கலிபுல்லா பாக்கவி அவர்கள் சிறப்பு தொழுகை நடத்தி சிறப்பு பிரார்த்தனை செய்தார்கள் இந்நிகழ்வில் மேட்டுப்பாளையம் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் ஐக்கிய ஜமாத் பொறுப்புதாரிகள் பள்ளிவாசல் இமாம்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டனர்.