சென்னை ராயல் மெரீடியனில் மருத்துவத்துறை சாதனையாளர் விருது -2024 கேரள கவர்னர் வழங்கினார்.

சென்னை ராயல் மெரிடியன் ஹோட்டலில் உள்ள கருத்தரங்க வளாகத்தில் 8-வது மருத்துவ சாதனையாளர்கள் விருது வழங்கும் விழா நடைபெற்றது. உலகத் தமிழ் வர்த்தக சபையின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கேரள மாநில கவர்னர் ஆரிஃப் முகமது கான் கலந்து கொண்டு மருத்துவத்துறையில் சிறப்பாக சேவையாற்றியவர்களுக்கு "மருத்துவ சாதனையாளர் விருது-2024"-ஐ வழங்கி கௌரவித்தார். இதில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த டாக்டர் பொன் கேத்தேஸ்வரன், டாக்டர் மணிகண்டன், டாக்டர் அசோக் தியாகராஜன், டாக்டர் ஸ்ரீனிவாச செல்வராஜ், டாக்டர் கே.வி. ராஜலட்சுமி, டாக்டர் ஜெயஸ்ரீ, டாக்டர் சங்கர், டாக்டர் திலீப் மற்றும் பலர் சிறந்த மருத்துவ சேவைக்கான விருதினை கேரள கவர்னரின் திருக்கரத்தால் பெற்றுக் கொண்டனர். முன்னதாக இந்நிகழ்ச்சியை சிறப்புற ஏற்பாடு செய்த உலகத் தமிழ் வர்த்தக சபையின் தலைவர் ஜே செல்வகுமார் வரவேற்பு உரை ஆற்றினார். நிகழ்ச்சியில் வேலூரில் மையத்தின் துணைத் தலைவர் டாக்டர் சிவி செல்வம், டாக்டர் வி சத்யநாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியினை ஏ. ஜான் தன்ராஜ் தொகுத்து வழங்கினார்.