தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்குட்பட்ட மயிலாடும்பாறை தனியார் மஹாலில் தேனி முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரமங்கைகள் நலச்சங்கம் (வைகை ஜவான்) மற்றும் மதுரை குரு மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகாவிற்குட்பட்ட மயிலாடும்பாறை தனியார் மஹாலில் தேனி முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரமங்கைகள் நலச்சங்கம் (வைகை ஜவான்) மற்றும் மதுரை குரு மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது. குறிப்பாக மலைகிராமபகுதிகளில் உள்ள ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் புற்றுநோய் பரிசோதனை, இருதய பரிசோதனை, ரத்த கொதிப்பு பரிசோதனை,குழந்தையின்மை பரிசோதனைகள் இலவசமாக மக்களுக்கு செய்யப்பட்டதோடு மருத்துவர்கள் சார்பாக மக்களுக்கு புற்றுநோய் இதய நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்கள் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தபட்டது இதில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மலை கிராம மக்கள் கலந்து கொண்டு இந்த இலவச மருத்துவ முகாமை பயன்படுத்தினர். இந்த மருத்துவமுகாம் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீர மங்கைகள் நல சங்கத்தலைவர் சி.பவுன் மற்றும் மதுரை குரு மருத்துவமனை தலைமை மருத்துவர் சோம்ஸ் கந்தன் தலைமையில் நடைபெற்றது. இதில் முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் வீரமங்கைகள் நல சங்கநிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.