விபத்திலா சென்னை - ஆகஸ்ட் 26 நிகழ்ச்சிக்காக வாடகை வாகன ஓட்டுனர்களுக்கு விழிப்புணர்வு முகாம்!

சென்னை கீழ்ப்பாக்கம் ஈகா திரையரங்கம் அருகில் ஈகோ பூங்காவில் உள்ள கருத்தரங்க வளாகத்தில் போக்குவரத்து காவல்துறை சார்பில் விபத்தில் சென்னை ஆகஸ்ட் 26 என்ற நிகழ்ச்சிக்காக வாடகை வாகன ஓட்டுனர்களுக்காக விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமில் சென்னை போக்குவரத்து காவல்துறை கூடுதல் ஆணையர் சுதாகர் தலைமை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்துகளை வழங்கினார். இதில் சிகரம் ஓட்டுநர்கள் சங்கம், உரிமை கரங்கள் ஓட்டுனர்கள் சங்கம், அக்னி சிறகுகள் ஓட்டுநர்கள் சங்கம், மற்றும் ரேபிட்டோ நிறுவன நிர்வாக அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதில் சேத்துப்பட்டு பகுதியில் உள்ள போக்குவரத்து துணை ஆணையாளர் சீனிவாசன், போக்குவரத்து ஆய்வாளர் இரா. செந்தில்நாதன், சென்னை போக்குவரத்து துறையைச் சார்ந்த அதிகாரிகள் பாஸ்கரன், சங்கர், குப்பன், எத்திராஜ், மு. ஆனந்தி, சிவசெந்தில் முத்து, விமல் ராஜ் ,சிகரம் ஓட்டுநர்கள் சங்க தலைவர் டெல்லி பாபு, அனைத்து ஓட்டுநர்கள் வாழ்வுரிமை சங்கத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன், ரேபிடோ நிறுவன அலுவலர் டெரன்ட்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். இம் முகாமில் விபத்தில்லாமல் ஓட்டிய லோகேஷ், பாலன், அண்ணாதுரை, முபாரக் பாஷா, முருகவேல், சிவலிங்கம் மற்றும் பாக்கிய செல்வன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டது.