அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலைமை செயற்குழு கூட்டம்!!!

அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலைமை செயற்குழு கூட்டம். தேனியில் அகில இந்திய பார்வர்ட் பிளாக் தலைமை செயற்குழு கூட்டம் தேனி தனியார் ஹோட்டல் மீட்டிங் ஹாலில் மாநில பொருளாளர் சுரேஷ் தலைமையிலும், மாநில செயலாளர் திண்டுக்கல் ஜெயராமன் முன்னிலையில் நடைபெற்றது.மாநில பொதுச்செயலாளர் சிறப்புரையாற்றினார்.இக்கூட்டத்தில் தேனியில் வருடகணக்கில் நடைபெற்று வரும் மேம்பால பணிகளை உடனடியாக மாற்றுப்பாதையை உருவாக்கி மேம்பால பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் இத்துடன் 8 தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.இக்கூட்டத்தில் மத்தியகுழு உறுப்பினர்கள் சுப்புராஜ்,நல்லமுத்து, ராஜசேகர், மாநில செயலாளர் பாலுமோகன் , சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.கூட்ட முடிவில் மாவட்ட பொதுச்செயலாளர் சக்கரவர்த்தி நன்றி கூறினார்.