திருப்பூர் மாவட்டம் கருவலூரில் அரசு மதுபான கடையில் 24 மணி நேரமும் மது பெட்டி சப்ளை பார் உரிமையாளர் உடன் கூட்டுக் கொள்ளையில் டாஸ்மாக் ஊழியர்கள் கண்டுகொள்ளாத மாவட்ட மேலாளர்.

திருப்பூர் மாவட்டம் கருவலூரில் அரசு மதுபான கடை எண் 2206, எப்பொழுதும் 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாக பொதுமக்கள் தகவல் தெரிவித்தது அடுத்து, இன்று ஆகஸ்ட் மாதம் 19 ம் தேதி திங்கள்கிழமை காலை 8 மணி அளவில் செய்து சேகரிக்கு சென்ற போது. அரசு மதுபான கடையை திறந்து இரண்டு பெட்டி மதுபானத்தை, பாரில் பல மடங்கு விலையில் இல்லீகல் விற்பனைக்கு கைமாற்றிவிடும் வீடியோ. திருப்பூர் மாவட்டத்தில் 24 மணி நேரமும் தங்கு தடை இன்றி சரக்கு கிடைக்கவும். சரக்கு அதிக அளவு விற்பனை இது தமிழக அரசுக்கு அதிக வருவாய் ஈட்டி தர வேண்டும் என்று பாடுபடும் டாஸ்மார்க் ஊழியர்களே தமிழக அரசு கவுரவிக்க வேண்டும். பணி நேரமான மதியம் 12 மணி முதல் இரவு 10 மணி வரை போக மீதி நேரத்தில் சின்சியராக வேலை பார்த்து மது பிரியர்களுக்கும், தமிழக அரசுக்கும் 24 மணி நேரமும் பணியாற்றி வருகிறார்கள் என்று சமூக ஆர்வலர்கள் தலையில் அடித்துக் கொண்டு கூறினார்கள். மது பிரியர்களுக்காக 24 மணி நேரமும் சட்டவிராதமாக மது பானங்கள் அதிக விலைக்கு விற்பதை தடுக்க வேண்டிய தமிழக அரசாங்கம், அரசு அதிகாரிகள், காவல்துறையினர், மதுவிலக்கு போலீசார், டாஸ்மார்க் மாவட்ட மேலாளர் அனைவரும் ஒன்றிணைந்து வேடிக்கை பார்ப்பதால். வருங்கால இளைய சமுதாயத்தினர் மது போதைக்கு அடிமையாக தொடர்வதை யாராலும் தடுக்க முடியாது என்பது உறுதி.