திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள இடங்களில் 10 ரூபாய் காயின்களை வாங்காதது தொடர்பாக திருப்பூர் ஆட்சியரிடம் மனு!!!
திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள இடங்களில் 10 ரூபாய் காயின்களை வாங்காதது தொடர்பாக திருப்பூர் ஆட்சியரிடம் மனு!!!
திருப்பூர் ஆட்சியரிடம் சமூக ஆர்வலர்களாகிய ஈ.பி.அ.சரவணன் 10 ரூபாய் காயின்களை தாம்பூல தட்டில் வைத்து நூதன முறையில் மனு திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள இடங்களில் 10 ரூபாய் காயின்களை வழங்காதது தொடர்பாக மனு அளிக்க வந்த சமூக ஆர்வலர்களாகிய ஈ.பி.அ.சரவணன் சுமார் 50 க்கும் மேற்பட்ட10 ரூபாய் காயின்களை தாம்பூல தட்டில் வைத்து நூதன முறையில் மனு அளித்தார். திருப்பூர் மாவட்ட பகுதிகளில் பத்து ரூபாய் நாணயம் வாங்க மறுப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து பத்து ரூபாய் நாணயங்கள் பிரச்சனை உடனடியாக தீர அனைத்து வங்கிகளிலும் கடைகளிலும் தங்குதடையின்றி வாங்க மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வுகாணவும், பத்து ரூயாய் நாணயத்தை வாங்க மறுக்கும் நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 124 A பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுவது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலுள்ள திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் அவர்களை நேரடியாக தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச மாநில இணை பொதுச் செயலாளர் சமூக ஆர்வலர்களாகிய ஈ.பி.அ.சரவணன் 10 ரூபாய் காயின்களை தாம்பூல தட்டில் வைத்து நூதன முறையில் மனு அளித்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட திருப்பூா் மாவட்ட வருவாய் அலுவலா் த.ப.ஜெய்பீம் அவர்கள் இது தொடர்பாக உரிய தீர்வுகண்டு உடனடியாக மாவட்ட பகுதிகளிலுள்ள அனைத்து இடங்களிலும் 10, காயின் வாங்க வழிவகை செய்து வழங்காத நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்படும் என அவர் தெரிவித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து பகுதிகளிலும, கிராமப்புறங்களிலும் வணிக நிறுவனங்கள், போக்குவரத்து சேவை, மருந்தகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பத்து ரூயாய் நாணயம் வாங்க மறுப்பதால் அது செல்லாது என்கிற நிலையே மக்கள் மத்தியில் தற்போது வரை நீடித்து வருகிறது. அதனால் பல தருணங்களில் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். சென்னையைத் தாண்டினால் 10 ரூபாய் நாணயங்களை யாரும் வாங்குவதில்லை என்ற பிரச்னை ரொம்ப காலமாகவே இருக்கிறது. இதுதொடர்பாக அரசும், ரிசர்வ் வங்கியும் பல முறை விளக்கம் அளித்தும் இன்னமும் 10 ரூபாய் நாணயங்களை பல இடங்களில் வாங்க மறுத்து வருகின்றனர் இந்த நிலையில் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்து ரூயாய் நாணயம் உள்ளிட்ட 14 வகையான 10 ரூபாய் நாணயங்களுமே செல்லும் எனவும் அவற்றை செல்லாது என கூறுவதோ அதனை பணப்பரிமாற்றத்தின் போது கொடுக்கவோ வாங்கவோ மறுப்பது இந்திய தண்டனைச் சட்டம் 124 A வின் படி குற்றமாகும் ஒன்றிய அரசால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களை வாங்க மறுத்தால் அந்த குற்றத்திற்கு மூன்று வருட சிறை தண்டனையும் அபராதமும் வழங்கப்படும் என தற்போது ரிசர்வ் வங்கி விடுத்துள்ள எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்ட பகுதிகளில் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுக்கும் வியாபாரிகளால் பொது மக்கள் மிகுந்த பாதிப்படைந்து வருகின்றனா்.
இதையடுத்து, மத்திய ரிசர்வ் வங்கி இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் 10 ரூபாய் நாணயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வந்தன. இருப்பினும், இந்த நாணயங்களை வாங்க பலரும் தயங்கி வந்தனர். இந்த நிலையில் தான் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்று ஏற்கனவே உத்தரவு விடுத்துள்ளார். இதனை நமது மாவட்டத்திலும் பின்பற்றி 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
வியாபாரிகள், தொழில் நிறுவனங்கள், மற்றும் பெரிய சிறு பலசரக்கு கடைகளின் உரிமையாளா்கள் வாங்க மறுக்கின்றனா். அவா்களிடம் ஏன் வாங்க மறுக்கிறீா்கள் எனக் கேட்டால் நாங்கள் வாங்கினாலும் மொத்த வியாபார கடைகளில் வாங்க மறுக்கின்றனா். இதனால் சில்லறை வியாபாரிகளான நாங்கள் பத்து ரூபாய் நாணயத்தை வாங்குவதில்லை என தெரிவித்து வருகின்றனர். மேலும் திருப்பூர் பகுதிகளிலுள்ள பல பேருந்துகளிலும் பத்து ரூபாய் நாணயத்தை வாங்குவதில்லை. இதனால் பொது மக்கள் பெரிதும் பாதிப்படைந்து வருகின்றனா். எனவே மாவட்ட நிா்வாகம் வங்கிகளின் துணையோடு 10 ரூபாய் நாணயத்தை அனைவரும் வாங்க வேண்டும் என உத்தரவிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுமட்டுமின்றி ஒருவேளை அப்படியே ஒரு சில வங்கிகளில் வாங்கினாலும் கூட 10 ரூபாய் நாணயங்களை பணப்பரிவர்ததனையின் போது பரிமாற்றம் செய்ய ஆயிரம் ரூபாய்க்கு 50 ரூபாய் வரை வங்கி ஊழியர்கள் கமிஷன் கேட்பதாக ஒரு குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருவதாலும், வங்கிகள் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாலும் மேலிருந்து ஒவ்வொரு துறையாக அந்த 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் சூழ்நிலை உருவாகி தற்போது அது செல்லாது என்கிற தவறான புரிதல் மக்கள் மத்தியில் நிலவத் தொடங்கி விட்டது. ஒன்றிய அரசு அங்கீகரித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அனைத்து வகையான 10 ரூபாய் நாணயங்களையும் முதலில் அனைத்து வங்கிகளும் தங்குதடையின்றி வாங்கி பணப்பரிவர்ததனை செய்தாலே திருப்பூர் பகுதி முழுவதும் நிலவும் இப்பிரச்சினைக்கு சுமூக தீர்வு கிடைத்து விடும் என்பதால் அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் அனைத்து தனியார் வங்கிகளும் 10 ரூபாய் நாணயங்களை வாடிக்கையாளர்களின் பணப்பரிவர்த்தனையின் போது தங்குதடையின்றி வாங்க வேண்டும் என வங்கிகளுக்கு கண்டிப்புடன் கூடிய உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது. எனவே இது தொடர்பாக உடனடியாக போர்க்கால அடிப்படையில் விரைவாக தீர்வுகண்டு திருப்பூர் மாவட்ட பகுதிகளிலுள்ள இடங்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுக்கும் வங்கிகள் மற்றும் நிறுவன ஊழியர்கள் மீது மேற்சொன்ன பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச சார்பில் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.