கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சி கூட்டத்தில் நகர மன்ற தலைவரை தாக்க முயன்றதால் பரபரப்பு

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நகராட்சியில் சாதாரண கூட்டம் இன்று நடைபெற்றது இந்த கூட்டத்தில் பல்வேறு பொருள்கள் குறித்து விவாதம் காரசாரமாக நடைபெற்று வந்தது இந்நிலையில் ஒரு பொருள் குறித்து விவாதம் நடந்து கொண்டிருக்கும்போது மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் அஷ்ரப் அலி நகராட்சி ஆணையாளர் அமுதா மீதும் நகர மன்ற துணைத் தலைவர் அருள் வடிவு முனுசாமி ஆகியோர் மீதும் அதிமுக நகர மன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து டம்ளரை கொண்டு தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது இதனால் கூட்டத்தை ஒத்திவைத்து விட்டு பெண்கள் என்பதால் நகர மன்ற தலைவர் நகராட்சி ஆணையாளர் நகர மன்ற துணைத் தலைவர் மீது ஒவ்வொரு கூட்டத்திலும் தொடர்ந்து தாக்குதல் நடத்த முயற்சி நடைபெற்று வருவதாலும் இரண்டு நகர மன்ற கூட்டத்திற்கு அதிமுக நகர மன்ற உறுப்பினர்களை சஸ்பெண்ட் செய்வதோடு நகராட்சி சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் நகர மன்ற தலைவர் உத்தரவிட்டார்.