தேனி அருகே பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு அகற்றப்பட்ட அரசு மதுபான கூடம் மீண்டும் இப்போது தொடங்க உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி!!!

பள்ளிகள், கல்லூரிகள் அருகில் இருப்பதால் மதுபானக்கூடம் செயல்பட அனுமதிக்க கூடாது என அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் தேனி ஆட்சியரிடம் கோரிக்கை தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அருகே மேல சொக்கநாதபுரம் பேரூராட்சி பகுதிக்கு உட்பட்ட இடத்தில் புதிதாக தனியார் மதுபானக்கூடம் திறக்கப்பட உள்ளதால் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த தேனி அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனுவை அளித்தனர் மேல சொக்கநாதபுரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பள்ளிகள், கல்லூரிகள் அதிகம் உள்ள நிலையில் அதற்கு அருகில் தனியார் மனமகிழ் மன்றம் மதுபான கூடம் அமைக்கப்படுவதால் பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர்களுக்கு இடையூறு ஏற்படும் நிலை உள்ளது. மேலும் இதற்கு முன்பு அதே இடத்தில் அரசு மதுபான பார் செயல்பட்ட நிலையில் அங்கு வரும் மது பிரியர்கள் பள்ளி, கல்லூரி மாணவர்களை பாட்டிலால் அடித்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு வந்த நிலையில் பல போராட்டங்கள் பிறகு அரசு மதுபான கடை அங்கிருந்து அகற்றப்பட்டது இந்நிலையில் தற்போது மீண்டும் அதே இடத்தில் மனமகிழ் மன்றம் என்ற பெயரில் தனியாருக்கு மதுபானக்கூடம் தொடங்க இருப்பதால் பொது மக்களுக்கு பல்வேறு வகையில் இன்னல்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக கூறி மதுபானபாரை அங்கு செயல்பட அனுமதிக்க கூடாது என அரசு சட்டக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் தேனி ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை அளித்தனர்.