மத்திய அரசு கொண்டு வந்த மூன்று திருத்த சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி சட்டக் கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு செய்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சி சட்டம் ஆகிய மூன்று சட்டங்கள் திருத்தம் செய்யப்பட்டு கடந்த மாதம் நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட நிலையில் இதற்கு பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புகள் கிளம்பியது, தமிழ்நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் வழக்கறிஞர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த மூன்று சட்டத் திருத்தங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தேனி தப்புகுண்டுவில் அமைந்துள்ள அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் காலை முதலே வகுப்புகளை புறக்கணிப்பு செய்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர், திரும்பப் பெறு, திரும்பப் பெறு மூன்று சட்ட திருத்தங்களை திரும்பப் பெறு என்ற கோஷங்களை எழுப்பி மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மக்கள் மன்றங்களின் கூட்டமைப்பு தலைவர் மதிப்பிற்குரிய வழக்கறிஞர் MKM முத்துராமலிங்கம் MABL தேனி பழனிசெட்டிபட்டி பேரூராட்சி மற்றும் வீரபாண்டி பேரூராட்சிகளின் சேர்மன் ஆகியோர் மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு கோஷங்களை எழுப்பினர் இந்த நிகழ்வில் அரசு சட்டக் கல்லூரியை சேர்ந்த மாணவர்கள் சுமார் 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்று கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.