வெள்ளாளர் சமுதாய மக்களுக்கு முன்னணிக் கட்சிகள் தேர்தலில் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம் என வெள்ளாளர் முன்னேற்றக்...
வெள்ளாளர் சமுதாய மக்களுக்கு முன்னணிக் கட்சிகள் தேர்தலில் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் தேர்தலை புறக்கணிப்போம் என வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் ஆலோசனைக் கூட்டத்தில் அறிவிப்பு
தேனி அருகே வீரபாண்டியில் உள்ள தனியார் மண்டபத்தில் வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வெள்ளாளர் முன்னேற்றக் கழகத்தின் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு நாடாளுமன்ற தேர்தலில் தங்கள் சமுதாய மக்களுக்கு அரசியல் கட்சிகள் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆலோசனை செய்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மாநில மாணவ அணி செயலாளர் தேனி நாடாளுமன்ற தொகுதியில் வெள்ளாளர் சமுதாயத்தை சேர்ந்த சுமார் மூன்று லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் இருக்கின்றது எனவும் முன்னணி அரசியல் கட்சிகள் தங்கள் சமுதாயத்திற்கு பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் என்றும் திமுக, அதிமுக உள்ளிட்ட முன்னணி அரசியல் கட்சிகள் வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தல் அல்லது சட்டமன்றத் தேர்தல்களில் தங்கள் சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்றும் இல்லை என்றால் தங்கள் சமுதாய மக்கள் தேர்தல்களை புறக்கணிப்போம் என்று தெரிவித்தார்.