சிக்கதாசம்பாளையம் பகுதி மக்களுக்கு சுத்தமான குடிநீர் கேட்டு அதிகாரி சுற்றி வளைப்பு!

கோவை மாவட்டம், காரமடை ஒன்றியம், சிக்கதாசம்பாளையம் ஊராட்சி, சேரன் நகர் பகுதியில் 30 நாட்களுக்கு மேல் தண்ணீர் வராமல் இருப்பதால் பொதுமக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தனர். அதன் பேரில் கோவை மாவட்ட AD பஞ்சாயத்து பஷீர் நேரடியாக பகுதியை பார்வையிட்டார். உடன் காரமடை வட்டார வளர்ச்சி அலுவலர் , TWAD அலுவலர்களும் இருந்தனர். அப்போது அங்கு இருந்த பொதுமக்கள் அவரது வாகனத்தை முற்றுகையிட்டு அவரிடம் சரமாரியான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் " மாதத்திற்கு ஒரு முறை தான் தண்ணீர் தருவீர்களா? எங்களுக்கு நோய் வந்து செத்தால் என்ன ஆகும்? என்று சரமாரியான கேள்விகளை கேட்டனர் . மேலும் அங்குள்ள கீழ்நிலை தொட்டி சரிவர சுத்தம் செய்யாமல் பல நாட்களாக இருந்து வந்ததை அவரை வைத்து திறந்து காட்ட சொல்லி அதை சுத்தம் செய்ய பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர். இவ்வாறு தண்ணீருக்கு பல பிரச்சனைகள் சேரன் நகர் பகுதி மக்கள் சந்தித்து வருகின்றனர். நன்றாக மழை பெய்கின்ற காலத்தில் கூட குடி தண்ணீருக்கு பிரச்சனையா? என பொதுமக்கள் புலம்புகின்றனர்.