பிரபல தொழிலதிபர் ஏஎம்ஜி பொன் விழா!

சென்னையில் ஏ எம் ஜி குரூப் ஆஃப் கம்பெனிஸ் சேர்மன் ஏ எம் கணேசுக்கு 50- வது ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் திரளாக கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தொழிலதிபர் ஏ எம் கணேசுக்கு இது பொன்விழா என்பதால் கூடுதல் சிறப்பு வாண வேடிக்கைகளோடு பிறந்தநாள் விழா அமர்க்களப்பட்டது. ஏ எம் ஜி - 50 பிறந்தநாள் தலைப்பில் சென்னை முழுவதும் வண்ண சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தது.