தாளவாடியில் உள்ள குட்டையில் அனுமதிக்கப்பட்ட அளவை  விட  லாரிகளில் அதிகமாக மண் அள்ள படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றசாட்டு - வசூலை வாரி குவிக்கும்  தாசில்தார்.

தமிழகத்தில் குட்டைகளில் விவசாய பயன்பாட்டிற்காக இலவசமாக மண் எடுத்துக் கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள எரகனள்ளி பகுதியில் உள்ள பெலிகிரி குட்டையில் கடந்த சில நாட்களாக மண் அள்ளப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு விவசாயிகளின் பெயரில் மட்டும் அனுமதி வாங்கிவிட்டு அதைவிட 10 மடங்கு அதிகமாக மண் விற்கப்படுகிறது. மேலும் அனுமதி கேட்கும் எல்லா விவசாயிகளுக்கும் அனுமதி அளிக்கப்படாமல் தாசில்தாருக்கு மாமூல் தரும் குறிப்பிட்ட விவசாயிகளுக்கு மட்டும் மண் அள்ள அனுமதிக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அனுமதிக்கப்பட்ட அளவைக் காட்டிலும் பல மடங்கு ஜேசிபி எந்திரங்கள் மூலம் மண் நிரப்பி செல்லப்பட்டு விற்கப்படுகிறது.ஒரு குட்டையில் மண் அள்ள வேண்டும் என்றால் ஊராட்சி ஒன்றிய பொறியாளரை வைத்து அளவீடு செய்யப்பட்டு குறிப்பிட்ட அளவை மட்டுமே மண் எடுக்க வேண்டும். ஆனால் பெலிகிரி குட்டையில் தாசில்தார் சுப்பிரமணியத்திற்கு வேண்டப்பட்டவர்கள் குட்டையில் ஒருபுறமாக மண் எடுக்காமல் அவர்களுக்கு எந்த மாதிரி தேவைப்படுகிறதோ ஆங்காங்கே பல அடி ஆழம் தோண்டி வைத்துள்ளனர். நாளை மழை பெய்து நிரம்பி வரும் பட்சத்தில் குட்டையில் இறங்குபவர்கள் நீரில் மூழ்கி உயிரிழக்கக் கூடிய அபாய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது. எனவே மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து இந்த குட்டையில் மண் அள்ளுவதற்கு முறைகேடாக செயல்பட்ட அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர். மேலும் சாதாரண விவசாயிகள் மண் அள்ள அனுமதி கேட்டாலும் அனுமதி தருவதில்லை. அவர்களுக்கும் அனுமதி வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.