பெரியகுளம் வடகரை நவாப் ஜாமீஆ மஸ்ஜித் பள்ளிவாசல் வளாகத்தில் பெரியகுளம் வட்டார ஜமா அத்துல் உலமா சபையின் சார்பில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது!

பெரியகுளம் வடகரை நவாப் ஜாமீஆ மஸ்ஜித் பள்ளிவாசல் வளாகத்தில் பெரியகுளம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் சார்பில் சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வட்டார தலைவர் உமர்அலி யூசுபி தலைமை தாங்கினார். வடகரை பள்ளிவாசல் தலைவர் அப்பாஸ் முன்னிலை வகித்தார். துணைத் தலைவர் ஆரிக் அஹமது வரவேற்று பேசினார். செயலாளர் அகமது பெளஜிதீன் தொகுத்து நிகழ்ச்சியில் மஸ்ஜிதே குராஸானியின் தலைமை இமாம் மற்றும் ஜாமிஆ அல் ஹீதா அரபிக் கல்லூரி முதல்வர் சதீதுத்தீன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பேசிய போது: தற்போது மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் சமூக வலைத்தளத்தை அதிக அளவில் பயன்படுத்துவதால் அதன் மூலம் மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகி வருகிறது.மேலும் இளைஞர்கள் பல்வேறு குற்ற செயலில் ஈடுபடுவதற்கு பல்வேறு வகையிலும் வழிகள் உள்ளதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.மேலும் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒழுக்கத்துடன் சமூகத்தில் இருக்க வேண்டும்.தவறான செயல்களில் ஈடுபடக்கூடாது உள்ளிட்ட விழிப்புணர்வுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் தி.மு.க. மாவட்ட சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் சேக் அப்துல்லா,வட்டார அளவில் உள்ள பள்ளிவாசல் தலைவர்கள்,நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.முடிவில் பொருளாளர் ரியாஜுதீன் மக்தூபி நன்றி கூறினார்.