தமிழக மக்களுக்கு ஸ்டாலின் கொடுத்த வாழைப்பழம் என்று கோவையில் பொதுமக்களுக்கு கொடுத்து பா.ஜ.க வினர் நூதன போராட்டம்!!!

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பல பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து அதை இன்று வரை நிறைவேற்றாமல் தமிழக மக்களை தொடர்ந்து வஞ்சிக்கும் தி.மு.க அரசை கண்டித்து கோவை சிவானந்தா காலனி பகுதியில் O.B.C அணி மாவட்ட தலைவர் சுதாகர், வர்த்தக அணி மாவட்ட தலைவர் குணா மற்றும் பட்டியல் அணி தலைவர் விவேக் ஆகியோர் தலைமையில் பா.ஜ.க வினர் பொதுமக்களுக்கு வாழைப்பழம் கொடுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் இது குறித்து தொகுதி பொறுப்பாளர் முரளி கூறும் போது, தமிழகத்தில் திறனற்ற திராவிட அரசினால் பொது மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருவதாகவும், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் பல எண்ணற்ற வாக்குறுதிகளை கொடுத்து வந்து உள்ளதாகவும், ஆனால் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றாமல் பொதுமக்களுக்கு தொடர்ந்து சதிகளை செய்து வருவதாகவும், "நீங்கள் நலமா" அறிவித்தது இதுதான் இந்த ஆண்டில் சிறந்த காமெடியாக உள்ளது எனவும், எந்த விஷயத்திற்கு நீங்கள் நலமா என்றும் தெரியவில்லை எனவும் கொடுத்த எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றாமல் இன்று விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வால் அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும், குடும்ப தலைவருக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாகவும், பொங்கல் பரிசு 5,000 ரூபாய் கொடுப்பதாக கூறிய அவர், கல்வி கடன், நகை கடன் தள்ளுபடி என அனைத்து வாக்குறுதிகளும் மக்கள் ஏமாற்றம் அடைந்து உள்ளதாகவும், பாரத் பிரதமர் மோடி சொல்லாத வாக்குறுதிகளை சொன்னதாக சொல்லி வடை சுடுகின்ற போராட்டம் நடத்துவதாகவும், அவர்களை அடக்குவதற்கு ஆளுங்கட்சி தி.மு.க வின் காவல்துறை தட்டிக் கேட்க முடியவில்லை என்று அதனால் தொடர்ந்து மக்களை வஞ்சிக்கின்ற தி.மு.க அரசு மக்களுக்கு வாழைப்பழம் கொடுக்கிறது. இது வரை திமு.க வினர் எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டினார். பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சியை தடுக்க வேண்டும் என்று வடை சுடும் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், அதனை பொதுமக்கள் கண்டுகொள்ளவில்லை என்றும் வாழைப்பழம் கொடுக்கின்ற தி.மு.க அரசை மக்கள் மாற்ற நினைப்பதாகவும், அதனால் வரக் கூடிய தேர்தலில் மிகப்பெரிய மாற்றம் வரக் கூடும், பா.ஜ.க மிகப்பெரிய அளவில் வெற்றி பெறும் என்றும் கூறினார். இந்த நூதன போராட்டத்தில் தொகுதி பொறுப்பாளர்கள் வி.எம்.ராஜன், ஆர்.டி.முரளி, எஸ்.ஆர்.தாமு, கண்ணன் தேவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு வாழைப்பழங்களை கொடுத்தனர்.