மேட்டுப்பாளையம் ஸ்ரீ குமரன் கல்லூரியில் விளையாட்டு திருவிழா

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம், ஸ்ரீ குமரன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தெய்வத்திரு துரைசாமி நினைவு கோப்பை விளையாட்டுப் போட்டிகள் பள்ளி மாணவ மாணவிகளிடையே ஸ்ரீ குமரன் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. போட்டியில் கோவை மாவட்டம் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் இருந்து 16 பள்ளி அணிகள் பங்கேற்றது. இப்போட்டி மரியாதைக்குரிய கல்லூரி முதல்வர் முனைவர் வே.சுகுணா அவர்களின் தலைமையில் நடைபெற்றது. தொடக்க விழாவின் சிறப்பு விருந்தினராக மரியாதைக்குரிய சுகு வேங்கடசாமி அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார் விளையாட்டு போட்டியில் மாணவர்கள் பிரிவில் கால்பந்து போட்டியில் ஊமப்பாளையம் அரசு மேல் நிலைப்பள்ளியும், கைப்பந்து போட்டியில் கீழ் கோத்தகிரி அரசு மேல் நிலைப்பள்ளியும், மட்டைப்பந்து போட்டியில் மேட்டுப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியும் கபாடி போட்டியில் சிறுமுகைப்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளியும், மாணவிகள் பிரிவில் கொக்கோ போட்டியில் மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியம் கைப்பந்து போட்டியில் பெத்திக்குட்டை அரசு மேல்நிலைப்பள்ளியும் வெற்றிக் கோப்பைகளைத் தட்டி சென்றது. விழாவின் நிறைவாக பரிசளிப்பு நிகழ்வின் சிறப்பு விருந்தினராக மரியாதைக்குரிய வனக்கல்லூரி டீன் முனைவர். பாலசுப்பிரமணியன் மற்றும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் வனக் கல்லூரி உடற்கல்வி இயக்குனர் மரியாதைக்குரிய முனைவர். இராகவன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி வெற்றி பெற்ற மாணவ/மாணவிகளுக்கு கோப்பைகளையும் பதக்கங்களையும்சான்றிதழையும் வழங்கினார்கள். போட்டிகள் மகாஜன மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மரியாதைக்குரிய . ஜெயபாண்டியன் அவர்களின் வழிக்காட்டலின்படி சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் உடற்கல்வி ஆசிரியர்கள் பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.