தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சேடபட்டியில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் கார்த்திகை அமாவாசையில் தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நலமுடன் பல்லாண்டு காலம் வாழ வேண்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே சேடபட்டியில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் கார்த்திகை அமாவாசையில் தேமுதிக நிறுவன தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் நலமுடன் பல்லாண்டு காலம் வாழ வேண்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. ஆண்டிபட்டி அருகே உள்ள கிருஷ்ணன் கோவிலில் தேனி மாவட்ட செயலாளர் எம்.என்.கிருஷ்ணமூர்த்தி தலைமையில், ஆண்டிபட்டி வடக்கு ஒன்றிய செயலாளர் ரத்னவேல் பாண்டியன், மாவட்ட அவைத்தலைவர் மாயி மற்றும் இளைஞர் அணி செயலாளர் கந்தசாமி முன்னிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண நலம் பெற்று பல்லாண்டு வாழ வேண்டி சிறப்பு பூஜை செய்யபட்டது. இந்த நிகழ்வில் ஆண்டிபட்டி வடக்கு ஒன்றிய துணைச் செயலாளர் செல்வகுமார், ஒன்றிய அவைத் தலைவர் வேல்முருகன், மாணவரணி செயலாளர் பன்னீர்செல்வம், பெரியகுளம் நகர செயலளார் யுவராஜ் மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.