சவிதா சட்டக் கல்வி நிறுவனத்தில் யாழி விளையாட்டு போட்டி!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சவிதா சட்டக் கல்வி நிறுவனத்தில் தேசிய சட்ட விளையாட்டு துவக்க விழா "யாழி விளையாட்டு போட்டி",என்ற தலைப்பில் நடைபெற்றது. வரும் 24ஆம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் பல்வேறு போட்டியில் நடைபெறுகிறது. இதில் ஆசிய புகழ் பாடி பில்டர் வீராங்கனை செனாஸ் ரகுமான், சட்டக்கல்லூரி நிறுவனர் என். எம். வீரையன், சட்டக்கல்லூரி இயக்குனர் தீபா நல்லசாமி, கல்லூரி முதல்வர் ஆசாத் சுந்தரம், ஆவடி காவல்துறை உதவி ஆணையாளர் அன்பழகன், உடற்கல்வி பயிற்சி ஆசிரியர் ஸ்ரீதர் ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் கிரசன்ட் கல்லூரி, எஸ் ஆர் எம் கல்லூரி, புதுச்சேரி அம்பேத்கர் கல்லூரி, கோவை சிஐடி கல்லூரி உட்பட பல்வேறு கல்லூரியில் இருந்து மாணவர்கள் போட்டியில் பங்கு பெற்று பரிசுகளை பெற்றனர். நிறைவாக கல்லூரி மாணவர் விஷால் நன்றி கூறினார்.