தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கருப்பு பட்டை அணிந்து நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் மௌன அஞ்சலி ஊர்வலம் சென்றனர்.

ஆண்டிபட்டி தாலுகா-தேனி மாவட்டம் கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து - தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கருப்பு பட்டை அணிந்து நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் மௌன அஞ்சலி ஊர்வலம் சென்றனர். கொல்கத்தா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் மருத்துவர் பாலியல் துன்புறுத்தல் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் எதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று மருத்துவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில். மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மௌன அஞ்சலி ஊர்வலம் மேற்கொண்டனர். மருத்துவமனை வளாகத்தில் ஊர்வலமாக வந்து நுழைவுப்பகுதியில் அமைதியாக நின்றனர். கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்டதை கண்டித்தும், மருத்துவர்கள் மருத்துவமனைகளுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தவும். தேசிய மருத்துவர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றவும் வலியுறுத்தி கைகளில் பதாகைகளை ஏந்தி கோரிக்கைகளை முன்வைத்தனர். பேட்டி- அரவாளி- தமிழ்நாடு அரசு மருத்துவர் சங்க தேனி மாவட்ட செயலாளர்.