திருப்பூர் மாநகராட்சி 2வது வார்டில் மருத்துவ பணியாளர்கள் இல்லாமல் மூடி கிடக்கும் நகர்புற நல வாழ்வு மையம் பல லட்சம் மதிப்பிலான கட்டிடம் புதர் முண்டி கிடைக்கும் அவலம்

திருப்பூர் மாநகராட்சி இரண்டாவது மண்டலம், 2 வது வார்டில் சில மாதங்களுக்கு முன் பல லட்சம் மதிப்பிலான புதிய கட்டிடத்துடன கூடிய நகர்ப்புற நல வாழ்வு மையம் கட்டிடம் தமிழக முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது. ஆனால் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் கட்டிடம் புதர்கள் நிறைந்த காடாக காட்சியளிக்கிறது. இதனால் பல லட்சம் மதிப்புள்ள கட்டிடம் பராமரிப்பு இன்றி சிதலடைந்து பாலாய் போகும் அவலம் நிலையில் உள்ளது. பல லட்சம் மதிப்பிலான மக்கள் வரிப்பணம் மண்ணோடு மண்ணாக மக்கி போவதற்கு முன்பு தமிழக முதல்வர் , சுகாதாரத்துறை அமைச்சர் உடனடியாக திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் , கமிஷனர் , மாநகர மருத்துவ அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டிடம் சீரமைக்க வேண்டிய தொகையை மெத்தனமாக செயல்பட்ட அதிகாரிகளின் சம்பளத்திலிருந்து பிடித்தம் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவிக்கிறார்கள். உடனடியாக மருத்துவ பணியாளர்களை நியமனம் செய்து பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தமிழக முதல்வரின் சீரிய திட்டமான நகர்புற நல வாழ்வு மையம் மருத்துவமனை சிறப்பாக செயல்பட வைக்க வேண்டும் . அப்படி செய்தால் மட்டுமே அரசு எடுக்கும் பல்வேறு சிறப்பான திட்டங்கள் கீழ்மட்ட பொது மக்களுக்கு சென்றடையும். இதுபோல் தமிழகத்தில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் போதிய பணியாளர்கள் இன்றி செயல்படாமல் உள்ளதாக கூறப்படுகிறது.