ஆண்டிபட்டி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஆண்டிபட்டி அருகே ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி மாணவர்களுக்கு வனத்துறை சார்பில் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பள்ளி வளாகத்தில் மாணவர்களை வைத்து மரக்கன்றுகள் நட்டு வைத்ததோடு வீட்டிற்கு ஒரு மரம் வளர்த்து மரம் வளர்ப்பதன் அவசியத்தை மாணவர்கள் உணர வேண்டும் என்று விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள திம்மரசநாயக்கனூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப்பள்ளியில் 250 மாணவ மாணவிகள் படித்து வரும் நிலையில் 250 மாணவர்களுக்கும் 250 பூ மரங்கள் வழங்கும் நிகழ்ச்சி ஆண்டிபட்டி வனத்துறை சார்பில் நடைபெற்றது. ஆண்டிப்பட்டி வனச்சரகர் அருள், பள்ளி தலைமை ஆசிரியர் சத்தியசீலா, ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினர். பள்ளி வளாகத்தில் மாணவர்களை வைத்து மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டதோடு ஒவ்வொரு மாணவரும் தனது வீட்டில் ஒரு மரக்கன்றுகளை வைத்து மரமாக வளர்ப்பதன் மூலம் வரும் நன்மைகளையும், மரக்கன்றுகள் வளர்ப்பது அவசியம் என்பது குறித்தும் அரசு பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆர்வமுடன் மரக்கன்றுகளை பெற்று கொண்ட மாணவர்கள் தங்களது வீடுகளில் மரக்கன்றுகளை வைத்து பெரிய மரங்களை வளர்த்து கிராமத்தை பசுமையாக்குவோம் என உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.