தொழு நோயை முற்றிலும் ஒழிக்கும் விதமாக ஆண்டிப்பட்டி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் நடத்திய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி!!!

தொழு நோயை முற்றிலும் ஒழிக்கும் விதமாக ஆண்டிப்பட்டி மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவிகள் நடத்திய தொழுநோய் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ஆண்டுதோறும் ஜனவரி 30 ஆம் தேதி தேசிய தொழுநோய் ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி தொழுநோயை முற்றிலும் ஒழிக்கும் விதமாக தொடர்ந்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொது இடங்களிலும் பள்ளிகளிலும் சுகாதாரத்துறை மற்றும் மருத்துவத்துறை சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தின் கீழ் இன்று ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொழுநோய் விழிப்புணர்வு பேரணியை வட்டார மருத்துவ அலுவலர் இளங்கோவன் துவக்கி வைத்தார் பேரணி ஆண்டிபட்டி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் துவங்கி ஆண்டிபட்டி நகரின் முக்கிய வீதியின் வழியாக சென்று பின்பு மீண்டும் பள்ளியை வந்தடைந்தது பேரணியில் வந்த மாணவிகள் தொழுநோய் விழிப்புணர்வு குறித்தும் நோயை தீர்க்கும் கூட்டு மருந்து சிகிச்சை குறித்தும் பாதாதைகளை ஏந்தியபடி கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். மேலும் பள்ளி வளாகத்தில் முன்னதாக நடைபெற்ற பேச்சுப்போட்டி கட்டுரைப்போட்டி ஆகியவற்றில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இத்தொழுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் டி . சுப்புலாபுரம் மருத்துவ அலுவலர்கள், பள்ளி ஆசிரியர்கள் , 100க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.