இந்து எழுச்சி முன்னணியின் 8ம் ஆண்டு பாரத மாதா தேர் பவனி சிறப்பாக நடைபெற்றது!!!

இந்து எழுச்சி முன்னணியின் 8ம் ஆண்டு பாரத மாதா தேர் பவனி சிறப்பாக நடைபெற்றது இந்த பாரத மாதா தேர் பவனி நிகழ்ச்சிக்கு இந்து எழுச்சி முன்னணியின் தேனி நகர தலைவர் செல்வ பாண்டி தலைமை வகிக்க நகர அமைப்பாளர் முத்துராஜ் முன்னிலை வகிக்க வேதபுரி ஸ்ரீ சித்பவாநந்த ஆசிரம சுவாமி ஸ்ரீ ஸ்வாமி பூர்ணானந்தா ஆசியுரை வழங்க மாவட்ட பொதுச் செயலாளர் மாய லோகநாதன் கொடியசைத்து துவக்கி வைத்தார் இந்த பாரத மாதா தேர் பவனியானது அல்லிநகரம் சாலை பிள்ளையார் கோவிலில் துவங்கி மதுரை சாலை பங்களா மேட்டில் உள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் நிறைவு பெற்றது. தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு இந்து எழுச்சி முன்னணி நிறுவனத் தலைவர் பொன் ரவி மாவட்ட தலைவர் ராமராஜ் மாவட்ட பொருளாளர் செந்தில்குமார் மாவட்ட அமைப்பாளர் கோவிந்தராஜ் மாவட்ட செயலாளர்கள் ராமமூர்த்தி, உள்ளிட்டோர் சிறப்புரை ஆற்ற மாவட்ட பொறுப்பாளர்கள் நகர பொறுப்பாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டன.