உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி!

தேனியில் மாவட்ட மனநல திட்டம்,மந்த்ரா பவுண்டேசன் இணைந்து நடத்தும் உலக தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி மாவட்ட சுகாதார நலப்பணி இணைஇயக்குனர் ரமேஷ்பாபு தலைமையில் நடைபெற்றது.மந்த்ரா மனநல திட்ட மருத்துவமனை மருத்துவர் ராஜேஷ்,மாவட்ட மன நல திட்ட மருத்துவர் ரவிக்குமார் முன்னிலை வகித்தனர். நடைபெற்றது. இப்பேரணியில் தேனி அரசுமருத்துவக்கல்லூரியில் பயிலும் சுமார் 50-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பிக்கொண்டு சென்றனர். சிறப்பு விருந்தினராக மாவட்ட கலெக்டர் ஆர்.வீ.ஷஜீவனா கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார். பேரணி பங்களாமேட்டில் தொடங்கி பெத்தாட்சி விநாயகர் கோவில் வரை சென்று முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில் மருத்துவ ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.