சமயநல்லூரில் காவல்துறை நடத்திய போதை ஒழிப்பு தின மாணவர்கள் பேரணி
சமயநல்லூரில் காவல்துறை நடத்திய போதை ஒழிப்பு தின மாணவர்கள் பேரணி
மதுரை மாவட்டம் சமயநல்லூர் காவல் நிலையம் சார்பாக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைப் பொருட்கள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு கருத்துகள் எடுத்துக் கூறப்பட்டது.
சமயநல்லூர் பகுதியில் புனித சூசையப்பர் உயர்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள், சமயநல்லூர் மற்றும் ஊர் மெச்சி குளம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் முக்கிய வீதிகளில் பேரணியாக சென்று போதை பொருள் பற்றிய எதிர்ப்பு பிரச்சாரம் செய்தனர்.
நிகழ்ச்சியில் காவல்துறை டிஎஸ்பி ஆனந்தராஜ், சமயநல்லூர் காவல் நிலைய ஆய்வாளர் சரவணன், துணை ஆய்வாளர்கள் ரமேஷ், மனோகரன், தலைமை காவலர் ராதாகிருஷ்ணன் தலைமையாசிரியர்கள் - லாரன்ஸ் எட்வின் பாபு, சம்பத் குமார் மற்றும் பத்திரிகையாளர் சி. தமிழ்ச்செல்வன் ஆகியோர் போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு கருத்துகளை எடுத்துக் கூறினர். நிகழ்ச்சியின் நிறைவாக போதை ஒழிப்பு விழிப்புணர் பற்றிய உறுதி மொழியினை காவல்துறையினரும், மாணவர்களும் எடுத்துக் கொண்டனர். பேரணியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். பரவை அரசு உயர்நிலைப் பள்ளியிலும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சமயநல்லூர் ஆய்வாளர் சரவணன், பொறுப்பு தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் போதை ஒழிப்பு உறுதி மொழியை ஏற்றுக்கொண்டனர்.