கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் ஜமபந்தி

மேட்டுப்பாளையத்தில் கோவை மாவட்ட ஆட்சித்தலைவர் கிரந்திகுமார்பாடி தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற 1433பசலி வருவாய் தீர்வாயம் ஜமபந்தி நடைபெற்றது இந்நிகழ்வில் மேட்டுப்பாளையம் நெல்லித்துறை ஓடந்துறை தேக்கம்பட்டி சிக்க தாசம்பாளையம்சிறுமுகை ஜடையம்பாளையம் ஆகிய பகுதிகளுக்கான மனு பெரும் நிகழ்வு நடைபெற்றது இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்களது மனுக்களை வழங்கினர் மனுக்களை பெற்ற மாவட்ட வருவாய் துறை அலுவலர் சர்மிளா மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்படும் என்று கூறினார் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் சந்திரன் மேட்டுப்பாளையம் நகராட்சி ஆணையாளர் அமுதா மேட்டுப்பாளையம் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் அஷ்ரப்அலி மற்றும் பல்வேறு துறை அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.