திருப்பூர் மாநகராட்சியில் வீதி எங்கும் குப்பைகள் நோய் பரவும் அபாயம் நடவடிக்கை எடுப்பாரா?

திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது வார்டு அண்ணா நெசவாளர் காலனி மாநகராட்சி தொடக்கப்பள்ளி எதிரில் குப்பை கழிவுகளால் நோய் பரவும் அபாயம். மற்றும் 1 வது வார்டு இந்திரா நகர் ஆரஞ்சு பேக்கரி அருகில் குப்பை கிடங்காக மாறியுள்ளது. திருப்பூர் மாநகராட்சியில் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் குப்பை சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது . ஆனால் திருப்பூர் மாநகராட்சி ஒன்றாவது வார்டு கவுன்சிலர் தனலட்சுமி ராமசாமி வார்டாகும் இதில் வீடு வீடாக குப்பை சேகரிக்கப்படுவதில்லை அதனால் ரோட்டோரங்களிலும் ஆங்காங்கே குப்பைகள் வீசப்படுகிறது. குப்பை தொட்டியில் கொட்டப்படும் குப்பைகள் முறையாக அகற்றப்படுவதில்லை . இதனால் குப்பைகள் அழுகி துர்நாற்றம் வீசுகிறது . மாணவ மாணவிகள் பொதுமக்கள் நடந்து செல்லவே அருவருப்பாக உள்ளது என்று கூறுகிறார்கள். திருப்பூர் மாநகராட்சியில் 60 வார்டுகளிலும் இதே நிலைதான் உள்ளதாகவும். மழை காலம் தொடங்க உள்ள நிலையில் வியாதிகளை பரப்பும் கிருமிகள் உற்பத்தி இடமாக திகழ்கிறது. இதனால் தொற்று நோய் பரவும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளார்கள் . இது குறித்த கவுன்சிலர் ஒருவர் கூறியதாவது திருப்பூர் மாநகரில் தனியார் ஒப்பந்ததாரர் மூலம் வீடு வீடாக குப்பை சேகரிப்பது தீவிரப்படுத்தப்படுவதால், திறந்த வெளிகளில் இருக்கும் குப்பைத் தொட்டிகளை ஒவ்வொன்றாக மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் தூய்மை பணியாளர்கள் மூலம் அகற்றி வருகின்றனர். ஆனால் இது தொடர்ந்து நடப்பதில்லை அமைச்சர் அதிகாரிகள் பொழுது கண்துடைப்புக்கு மட்டுமே நடக்கிறது ஆனாலும் திறந்த வெளிகளில் குப்பை கொட்டுவது தொடர்கிறது. உடனுக்குடன் அவை அகற்றப் படாததால் குப்பை தேங்கி சுகாதார கேடு ஏற்படுகிறது , தரம் பிரித்துகுப்பை சேகரிக்கும் பணி பாராளுமன்ற தேர்தல் அறிவித்த நாள் முதல் இன்று வரை தொய்வு அடைந்துள்ளது . மாநகராட்சி சுகாதார ஆய்வாளர்கள், அலுவலர்கள் குப்பையை அகற்றும் தனியார் ஒப்பந்ததாரர்களிடம் லட்சக்கணக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டு, பணிக்கு வரும் தூய்மை பணியாளர்கள் எண்ணிக்கையை அதிகமாக கணக்கு காட்டுவதும் . மாநகராட்சியில் அகற்றப்படும் குப்பைகள் எடை அளவை பல மடங்கு அதிகமாக கணக்கிடுவது என பல்வேறு முறைகளில் தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக செயல்படுகிறார்கள். இதனால் மாநகராட்சி துப்புரவு பணி முறையாக நடைபெறவில்லை என்பது உண்மைதான் என்று கூறினார். மேயர் தினேஷ்குமாரும், கமிஷ்னர் பவன் குமார் ஜி.கிரியப்பனவர் அதிரடியாக நடவடிக்கை எடுப்பார்களா ? மழைக் காலத்தில் ஏற்படும் மழைநீர் வடிகால் அடைப்புகள் ஏற்பட்டு மழைநீர் வீடுகளுக்குள் வருமா? தொற்று நோய்கள் பரவுதல் போன்ற இடர்பாடுகள் இருந்து மாநகர மக்களை காப்பாற்றுவார்களா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.