குப்பை நகரமான குன்னத்தூர் பேரூராட்சி குப்பைகளை அள்ளாமல் தீ வைத்து கொளுத்தும் அவலம் சஸ்பெண்ட் செய்தும் திருந்தாத சிவக்குமார்
குப்பை நகரமான குன்னத்தூர் பேரூராட்சி குப்பைகளை அள்ளாமல் தீ வைத்து கொளுத்தும் அவலம் சஸ்பெண்ட் செய்தும் திருந்தாத சிவக்குமார்
திருப்பூர் மாவட்டம், குன்னத்தூர் பேரூராட்சியில், 15 வார்டுகள் உள்ளன. இந்த பேரூராட்சி முழுவதும் ஆங்காங்கே சேகரித்து குப்பைகள் அங்கே தீ வைத்துக் கொளுத்தப்படுகிறது . மேலும் ஒதுக்கு புறமான உள்ள கிராமப் பகுதிகளில் முறையாக சென்று குப்பைகள் வாங்கப்படுவதில்லை , சுமார் ஐந்து பேர் மட்டுமே நேரடி சுகாதார அரசு பணியாளர்கள் ஆவார்கள். மற்றும் 30-க்கும் மேற்பட்ட ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள் . கடந்த முறை இரண்டு மகளிர் சுய உதவி குழு மூலம் குப்பை சேகரிக்கப்பட்டிருந்த நிலையில். தற்போது ஒப்பந்த பணியாளர்களை பணி அமர்த்தி பேரூராட்சி நிர்வாகமே நேரடியாக தங்கள் மேற்பார்வையில் ஊதியம் வழங்கி வருகிறது. குறைந்த ஒப்பந்த தொழிலாளர்கள் பணிக்கு வருவதாகவும் , அதிக படியான ஒப்பந்த பணியாளர்கள் பணியாற்றியதாக கணக்கு எழுதி ஒப்பந்த பணியாளர்களின் ஊதியம் கையாடல் செய்யப்படுவதாக கூறப்படுகிறது .பேரூராட்சி நிர்வாகமே குப்பை சேகரித்து மக்கும் குப்பை ,மக்காத குப்பை என தரம் பிரித்து மக்கும் குப்பையில் உரம் தயாரித்தும், மக்காத குப்பையை சிமெண்ட் மற்றும் தார் தொழிற்சாலைக்கு அனுப்ப வேண்டும் .ஆனால் அந்த குப்பை கிடங்குகளிலும் குப்பைகளை தரம் பிரிக்காமல் அனைத்தையும் ஒன்றாக கொட்டி தீ வைத்தே கொளுத்தப்படுகிறது . இதனால் அந்தப் பகுதி காற்று புகை மண்டலத்தால் மாசு அடைகிறது .பல இடங்களில் குப்பை எடுக்கப்படாமல் துர்நாற்றம் வீசி வருகிறது . குன்னத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் பாலசுப்ரமணியம் இதற்கு முன்பு கொரோனா காலத்தில் இதே பேரூராட்சியில் செயல் அலுவலராக பணியாற்றிய பொழுது துப்புரவு மேற்பார்வையாளர் சிவகுமாரும் இணைந்து பல்வேறு மோசடியில் ஈடுபட்டதாக புகார் உண்டு. கடந்த ஆண்டு ரூ.3 கோடியே 75 லட்சம் செலவில் கட்டப்பட்ட வேளாண்மை விற்பனை கூடத்தை திறந்து வைக்க அமைச்சர் சாமிநாதன், கலெக்டர் வினீத் ஆகியோர் வந்தபோது. குன்னத்தூர் பஸ் நிலையம் அங்காளம்மன் கோவில் முன்புறமும் குப்பைகள் அள்ளப்படாமல் கிடந்தது. மதியம் 2 மணிக்கு மேல் தான் குப்பை அகற்றப்பட்டது. மேலும் திடக்கழிவு வளாகத்தில் தன்னிச்சையாக தனி நபரை துப்புரவு மேற்பார்வையாளர் சிவக்குமார் பணி அமர்த்தியது கண்டுபிடிக்கப்பட்ட. இதனால் தமிழக அரசுக்கும் ,குன்னத்தூர் பேரூராட்சி நிர்வாகத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக நடந்து கொண்ட துப்புரவு மேற்பார்வையாளர் சிவக்குமாரை தற்காலிகபணியிடை நீக்கம் செய்து செயல் அலுவலர் ராஜா உத்தரவிட்டார். உயர் அதிகாரிகளுக்கு கொடுக்க வேண்டியதை கொடுத்துவிட்டு மீண்டும் பணிக்கு வந்த துப்புரவு மேற்பார்வையாளர் சிவகுமார் மறுபடியும் வர்த்தக நிறுவனம், ஹோட்டல், மளிகை கடை, காய்கறி கடை ,இறைச்சிக்கடை, வாரச்சந்தை உட்பட அனைத்து பகுதிகளிலும் தனது கைவரிசை காட்டி வருகிறார். நீண்ட நாள் இதே பேரூராட்சியில் பணியாற்றி வருவதால் இவருக்கு அனைத்து பகுதியும் அத்துபடி ஆகும். புதிதாக வரும் பில் கலெக்டர் உட்பட அனைத்து அலுவலர்களையும் தனது கட்டுப்பாடு வைத்துக்கொண்டு தான் வசூல் செய்யும் லஞ்ச பணத்தை சொற் அளவில் கொடுத்துவிட்டு. இதுநாள் வரை கோடிக்கணக்கில் சம்பாதித்துள்ளார் . இவரின் லஞ்ச வேட்டையை தடுக்க நிரந்தரமாக பணி நீக்கம் செய்தால் மட்டுமே குன்னத்தூர் பேரூராட்சியில் அனைத்து வளர்ச்சி பணி முறையாக நடைபெறும் என்று அப்பகுதி மக்கள் ஆவேசமாக கூறினார்கள்.