முத்து கவுண்டன் புதூரில் தீ விபத்து! மூன்று பேர் உயிரிழந்த பரிதாபம்!
முத்து கவுண்டன் புதூரில் தீ விபத்து! மூன்று பேர் உயிரிழந்த பரிதாபம்!
முத்துக் கவுண்டன் புதூரில் வாடகை குடியிருப்பில் திடீர் தீ விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். நான்கு பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவம் நடைபெற்ற பகுதிக்கு கோவை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் தளபதி முருகேசன் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டு அப்பகுதியில் குடியிருப்பவருக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி அரசு உதவிகளுக்கு ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தார். மேலும் அங்கு வசிப்போருக்கு பாதுகாப்பு உணர்வு ஏற்படுத்தும் விதமாக தைரியம் தரும்படி பேசினார். இதனால் அப்பகுதியில் வசிப்போர் நிம்மதி அடைந்ததுடன் தைரியமும் அடைந்தனர்.