அவிநாசி ரேவதி நர்சிங் கல்லூரி சார்பில் நாளிதழ் வாசிப்பு குறித்த விழிப்புணர்வு

படிக்கும் காலத்தில் பொதுஅறிவை வளர்த்துக் கொள்ளுங்கள் . நவீன தொழில்நுட்ப சாதனங்களை அறிவு தேடல்கள் மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டு கொள் திருவிதாங்கூர் சமஸ்தானம் ராணி கௌரி லக்ஷ்மி பாய் பங்கேற்பு. திருப்பூர் மாவட்டம் அவிநாசி ரேவதி பார்மசி மற்றும் பாராமெடிகள் கல்லூரி சார்பில் மற்றும் புத்தகம் வாசிப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் திருவாங்கூர் சமஸ்தான ராணி பத்மஸ்ரீ கௌரி லட்சுமி பாய் அவர்களுக்கு பாராட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது இதில் கல்லூரி நிர்வாக அறங்காவலர் ரேவதி ஈஸ்வரமூர்த்தி முன்னிலை வகித்தார். கல்லூரி நிர்வாக இயக்குனரும் அறங்காவலருமான டாக்டர் ஹரி வரவேற்று பேசினார். ஒருங்கிணைப்பாளர் சுபிகிருஷ்ணன் மற்றும் கல்லூரி நிர்வாக அலுவலர் டாக்டர் எமரால்டு பொன்னையன் செல்வன் . சிறப்பு விருந்தினரை கௌரவித்து பேசினார் நிகழ்ச்சியில் இன்றைய இளைஞர்கள் நவீன தகவல் தொழில்நுட்பங்களை தேவையற்ற செய்திகளை கண்டு ரசித்து வருவதால் எண்ணம். சிந்தனை சிதறி வருகிறது. நாளிதழ்கள் வாசிப்பதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்பாடு ரேவதி நர்சிங் கல்லூரி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. இதில் நாளிதழ்கள் வாசிப்பதால் ஏற்படக்கூடிய நன்மைகள் அது ஒரு உயிரோட்டமான உணர்வை ஏற்படுத்தும் அனுபவத்தை நாளிதழ் ஏற்படுகிறது. நாட்டில் நடக்கக்கூடிய அனைத்து நிகழ்வுகளையும் உண்மை தன்மை மாறாமல் வெளியிடுகிறது. சமூக ஊடகங்கள் நம்பகத்தன்மை அற்ற செய்திகளை திணிக்கிறது என்பது குறித்து கல்லூரி மாணவ மாணவிகளுக்கு தெரிவிக்கப்பட்டது இதில் இன்றைய காலை அனைத்து தமிழ் ஆங்கில நாளிதழ்கள் மலையாள நாளிதழ்கள் முக்கிய சம்பவங்கள் குறித்து மாணவ மாணவிகள் படித்தறிந்தனர் தொடர்ந்து புத்தகம் மற்றும் நாளிதழ்கள் வாசிப்பின் மூலம் கிடைக்கும் புதிய சிந்தனைகள் அறிவுபூர்வமான தேடல்களுக்கான நேரடி அனுபவங்கள் குறித்து மாணவர்களிடையே ஆசிரியர்கள் விளக்கினர். தொடர்ந்து பத்மஸ்ரீ விருது பெற்ற திருவாங்கூர் மகாராணி பாராட்டு விழா நடைபெற்றது இதில் பங்கேற்ற கௌரி லட்சுமி பாய்க்கு சமுதாய சேவையை பாராட்டும் வகையில் கல்லூரி நிர்வாகம் மற்றும் மாணவ மாணவிகள் பரிசு வழங்கி கௌரவித்தனர்..