பொது விநியோகத் துறையில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி சென்னையில் சிஐடியு -வினர் உண்ணாவிரதம்!

சென்னை எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக பொது தொழிலாளர் சங்கம் (சிஐடியு பிரிவு) சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. இந்த உண்ணாவிரத நிகழ்ச்சிக்கு சி ஐ டி யு (டி என் சி எஸ் சி) மாநிலத் தலைவர் வி குமார் தலைமை தாங்கினார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ. சௌந்தரராஜன் துவக்க உரை நிகழ்த்தினார். கோரிக்கை விளக்க உரையினை மாநில பொதுச் செயலாளர் (டி என் சி எஸ் சி) ஆர் புவனேஸ்வரன், மாநில பொருளாளர் (டி என் சி எஸ் சி) எம். ஏழுமலை, மாநில செயலாளர் கே. ராசாங்கம் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். வாழ்த்துரை சிஐடியு மாநில உதவி பொதுச்செயலாளர் திருச்செல்வன் உட்பட பலர் உரையாற்றினர். உண்ணாவிரத நிகழ்ச்சியில் பொது விநியோகத்தை பலப்படுத்து! பொதுவு நீங்க குறைபாட்டினை அகற்று! காலி பணியிடங்களை உடனே நிரப்பு! பணி மூப்பு அடிப்படையில் பணி மாற்றம் வழங்கு! ஓய்வூதியதாரர்களில் ஓய்வூதியத்தை குறைந்தபட்சம் ரூ. 9000/- வழங்கு. உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய கோஷம் எழுப்பப்பட்டது. நிறைவாக சிஐடியு மாநில பொருளாளர் மாலதி சிட்டிபாபு நன்றி உரையாற்றினார்.