மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு 3 வாகனங்கள் மூலம் வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பிவைத்த தேனி மாவட்ட காவல்துறையினர்

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு 3 வாகனங்கள் மூலம் வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பிவைத்த தேனி மாவட்ட காவல்துறையினர். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் கன மழையின் காரணமாக தென் மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தீவு போல் காட்சியளித்தது இதனால் பொதுமக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர் இந்நிலையில் மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தேனி மாவட்ட காவல் துறையினர் சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் மூன்று வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டது மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு தேவையான தண்ணீர், பிஸ்கட், உணவு, போர்வை, மருந்துகள், டார்ச் லைட் உள்ளிட்ட 15 பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை 3 வாகனங்கள் மூலம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து சென்ற வெள்ள நிவாரண வாகனத்தை தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவீன் டோங்கரே உமேஷ் அனுப்பி வைத்தார்.