பிளாஸ்டிக் கழிவுகளால் நிறைந்து குப்பை கூடாரமாக மாறிவரும் தேனி புதிய பேருந்து நிலையம்,தேனி நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

தேனி புதிய பேருந்து நிலையத்தில் தினம்தோறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர் மேலும் பேருந்து நிலையத்தை சுற்றியுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு அலுவலகங்களுக்கு செல்லும் அரசு அலுவலர்கள் இந்த வழியை பயன்படுத்தி சென்று வருகின்றனர். இந்நிலையில் புதிய பேருந்து நிலையத்தில் முறையான குப்பை தொட்டிகள் இல்லாததால் பயணிகள் சாலை ஓரங்களில் ஆங்காங்கே பிளாஸ்டிக் பைகள், பாட்டில்களை வீசி எரிவதால் பிளாஸ்டிக் கூடாரமாக மாறி வருகிறது. மேலும் பேருந்து நிலையம் அருகில் குடிநீர் குழாயில் இருந்து தொடர்ந்து வரும் தண்ணிர் கழிவு நீர் கால்வாயில் வீணாக சென்று கலந்து விடுகிறது. முறையான பராமரிப்பு இல்லாததால் பேருந்து நிலையமே பிளாஸ்டிக் குப்பை கழிவுகளால் சூழ்ந்து இருப்பதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கவும். புதிய பேருந்து நிலையத்தில் சூழ்ந்துள்ள பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றி குப்பை தொட்டிகளை வைத்து முறையாக பராமரிக்க தேனி நகராட்சி நிர்வாகம் முன் வரவேண்டும் என சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.