தேனி அருகே ஸ்ரீரங்கபுரத்தில் சோழன் உலக சாதனை அதனைத் தொடர்ந்து இரண்டு மணி நேர சிலம்பத்தில் நட்சத்திர சிலம்பம் சுற்று தனித் திறன் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது!!!

தேனி அருகே ஸ்ரீரங்கபுரத்தில் சோழன் உலக சாதனை அதனைத் தொடர்ந்து இரண்டு மணி நேர சிலம்பத்தில் நட்சத்திர சிலம்பம் சுற்று தனித் திறன் உலக சாதனை நிகழ்ச்சி நடைபெற்றது சிலம்பப் போட்டியில் 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு சிலம்பம் சுற்றுகிறார்கள். தேனி மாவட்டம் ஸ்ரீரங்கபுரத்தில் உள்ள மைதானத்தில் தீபம் சிலம்பம் தற்காப்பு கலை அறக்கட்டளை தேனி மற்றும் தென்னிந்திய பாரம்பரிய சிலம்பாட்ட கலைக்கழகம் 4.ம் ஆண்டு இணைந்து நடத்தும் தொடர்ந்து4 மணி நேரம் முகத்தில் புலி வேடம் மற்றும் நடனமாடிக்கொண்டும் சிலம்பத்தில் பல்வேறு வகையான சுற்று முறைகளை சுற்றி சோழன் உலக சாதனை அதனைத் தொடர்ந்து 2 மணி நேரம்சிலம்பத்தில் நட்சத்திர சிலம்பம் சுற்றி தனித்திறன்சிலம்பப் போட்டி நடைபெற்றது. தேனி, சென்னை மதுரை திண்டுக்கல் திருச்சி கரூர்உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் மற்றும் அவர்களின் பயிற்சியாளர்கள் என பல குழுவினராக இந்த போட்டியில் பங்கு பெற்றனர். இதில் சிறப்பாக சிலம்பம் சுற்றி போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கும், குழுவினருக்கும் பரிசு கோப்பையுடன் பதக்கங்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு ஈஸ்வரன் தீபம் சிலம்பம் தற்காப்பு அறக்கட்டளை நிறுவனர் தேனி.