திருப்பூரில் எம்பிஎஸ் ஹோட்டலில் மசாஜ் என்ற பெயரில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம் எத்தனை முறை நடவடிக்கை எடுத்தாலும் வேறு வேறு பெயரில் தொடர்ந்து நடக்கும் அவலம்!!!!!!

திருப்பூர் ஈஸ்வரன் கோயில் வீதியில் உள்ள எம்பிஎஸ் ஹோட்டலில் மசாஜ் என்ற பெயரில் கொடிகட்டி பறக்கும் விபச்சாரம் காவல்துறையினருக்கு அல்வா கொடுக்கும் தீயாய் வேலை செய்யும் நபரும், முருகன் பிறந்த நட்சத்திர பெயர் கொண்ட நபரும் இணைந்த உள் வாடகைக்கு ரூம்கள் எடுத்துக்கொண்ட கோஷ்டிகள் . தங்கள் கண்ட்ரோலில் உள்ள ஐந்து ரூமுகள் மட்டும் மூடி கிடைப்பது போல் இருக்கும். யார் வந்தாலும் மசாஜ் நடப்பதில்லை என்று கூறி திருப்பி அனுப்புவார்கள் ஆனால் ரெகுலர் ,பழைய வாடிக்கையாளர்களுக்கு மட்டும் போன் மூலம் உறுதி செய்து மூடி கிடக்கும் அறையை வயதான பெண்மணி ஒருத்தர் திறந்து விடுவார். சுமார் ஐந்து பெண்களை செலக்சன் என்ற பெயரில் வாடிக்கையாளர்கள் தேர்வு செய்ய அணிவகுப்பு நடைபெறும் வயது ,அழகு, உடல்வாகு ,கலர் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான பெண்களை தேர்வு செய்து ஒரு மணி நேரம் உல்லாசமாக இருக்கலாம். நபர் ஒருவருக்கு ஒரு மணி நேரத்திற்கு 1500 ரூபாய் ரூம் வாடகை என்ற பெயரில் முதலில் வலுக்கட்டமாக வசூலிக்கப்படும். உள்ளே சென்று அவர்கள் தேர்வு செய்த பெண்கள் தாங்கள் பயன்படுத்தும் விதத்துக்கும். தாங்களின் இஷ்டத்துக்கு ஒத்துழைப்புக்கு தகுந்தார் போல் சுமார் ரூ.2000 முதல் 20 ஆயிரம் வரை பிடுங்கி விடுவார்கள் . வயிற்று பிழைப்புக்காக வரும் பெண்கள் பணத்தின் மீது உள்ள மோகத்தால் முழு நேர விபச்சாரியாகவே மாறி விடுகிறார்கள். பணத்தின் மீது உள்ள ஆசையால் தங்களுக்குத் தெரிந்த குடும்பப் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளையும் இந்த பாலான தொழிலுக்கு அழைத்து வந்து விடுகிறார்கள். திருப்பூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள எம் பி எஸ் ஹோட்டலில் காவல்துறையினருக்கு அல்வா கொடுத்துவிட்டு அறைய முழுமையாக மூடிவிட்டதாகவும் , மசாஜ் நடப்பது இல்லை என்று கூறி தெரிந்த வாடிக்கையாளருக்கு மட்டும் கதவை திறந்து விட்டு முழு நேரமாக செயல்பட்டு வருகிறது. திருப்பூர் மாநகர தெற்கு காவல் உதவி ஆணையாளர் நாகராஜ் நேர்மையாக இருந்தும் . அதிரடி நேரடி ஆய்வு மூலம் பல்வேறு மசாஜ் சென்டர் மீது தொடர்ந்து நடவடிக்கை எடுத்தும் . பலர் மீது குண்டாஸ் சட்டத்தில் கைது செய்தும். எந்தவித பயமின்றி தைரியமாக இந்த மசாஜ் செயல்படுவது எப்படி? இதன் உரிமையாளர்கள் பல்வேறு வழக்குள் இருந்தும். பல்வேறு புதுப்புது பினாமி பெயரில் மசாஜ் சென்டர் நடத்த தைரியம் வந்தது எப்படி எல்லாம் பணம் ஒரு நாள் ஒன்றுக்கு ரூ.50 ஆயிரம் முதல் லட்சம் வரை வருமானம் கிடைப்பதாலும் , சில உள்ளூர் போலீஸ்காரர் உதவியாக இருப்பதாலும் தைரியமாக பகிரங்கமாக மசாஜ் என்ற பெயரில் விபச்சாரம் செய்து வருகிறார்கள் என்று கூறப்படுகிறது . நேர்மையான திருப்பூர் மாநகர தெற்கு காவல் உதவி ஆணையாளர் நாகராஜ் என்ற குண்டாஸ் நாகராஜ் என்ற சிறப்பு பெயருடன் அழைக்கப்படும் அதிகாரி இருக்கும் எல்லையிலே இப்படி என்றால் மற்ற பகுதியில் எப்படி? மசாஜ் சென்டர் நடக்கும் என சமூக ஆர்வலர்கள் வருத்தம் தெரிவிக்கிறார்கள். திருப்பூர் தெற்கு மாநகர காவல் உதவி ஆணையாளர் நாகராஜ் எப்படி நடவடிக்கை எடுத்தாலும் உள்ளூர் தெற்கு காவல் நிலைய போலீசார் மற்றும் உளவுத்துறை போலீசார் தகவல் தெரிவித்தால் மட்டுமே இது போன்ற மிகப்பெரிய விபச்சார கும்பலை கூண்டோடு கைது செய்ய முடியும். அதிகாரிகள் நேர்மையாக இருப்பதைவிட அதிகாரிக்கு உதவியாக கீழ் பணியாற்றும் போலீஸ்காரர்கள் ஒத்துழைக்க வேண்டும் என்பது இது ஒரு உதாரணம்.