தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியதை தேனி தமிழக வெற்றி கழகத்தினர் பட்டாசுகளை வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்!

நடிகர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தினை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட நிலையில் தற்போது தேர்தல் ஆணையம் கட்சிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது மேலும் தமிழ்நாடு வெற்றிக்கழக நடத்தும் மாநாட்டிற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள கட்சியினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையம் அங்கீகாரம் செய்யப்பட்டது குறித்து விஜய் அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில் தேனியில் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். தேனி- பெரியகுளம் சாலையில் தமிழக வெற்றி கழகத்தின் இளைஞரணி தலைவர் பிரகாஷ் தலைமையில் கட்சியின் நிர்வாகிகள் சாலையில் பட்டாசுகளை வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர்.