சர்வதேச பெண்கள் தினம்: நாட்டுப்புற, பழங்குடியினர் பெண்கள் மற்றும் கலைஞர்கள் பங்குபெறும் ஸ்த்ரி ஷ்ரீஜண் நிகழ்ச்சி பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பங்கேற்பு...
சர்வதேச பெண்கள் தினம்: நாட்டுப்புற, பழங்குடியினர் பெண்கள் மற்றும் கலைஞர்கள் பங்குபெறும் ஸ்த்ரி ஷ்ரீஜண் நிகழ்ச்சி பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் பங்கேற்பு எம்.எல்.ஏ
சர்வதேச பெண்கள் தினம் நாட்டுப்புற, பழங்குடியினர் பெண்கள் மற்றும் கலைஞர்கள் பங்குபெற்ற ஸ்த்ரி ஷ்ரீஜண் நிகழ்ச்சி கோவை மக்கள் சேவை மையம் தலைவரும், பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., ஏற்பாட்டில் கோவை அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ., பேசும்போது. தேசிய மகளிர் தினத்தில் இன்று மத்திய கலை மற்றும் கலாச்சார அமைச்சகத்தின் தலைமை அமைப்பான சங்கீத் கலா நாடக் அகாடமி ஸ்த்ரி ஷ்ரீஜண் எனும் தலைப்பில் நாட்டுப்புற மட்டும் பழங்குடி கலைஞர் பாதுகாப்பு மையப்படுத்தி தமிழகம், கேரளா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய நான்கு மாநிலத்தைச் சேர்ந்த பெண்கள் கலந்து கொண்டு உள்ள, இந்த கலை நிகழ்ச்சிகளை வரும் தலைமுறையினருக்கு எடுத்துச் செல்ல வேண்டும் என்றும், தற்பொழுது உள்ள இளைஞர்கள் மத்தியில் சினிமா போன்ற புதுவகையான கலாச்சாரத்தை முன்னெடுத்து செல்கின்றனர். தொன்று தொட்டு வந்த பழங்கால நாம் முன்னோர்களின் கலைகளை கற்றுக் கொண்டு என்ன செய்வது என்றும், அதை ரசிப்பதற்கு இந்தியா போன்ற பறந்து விரிந்து உள்ள நாடுகளில் தமிழகம், மகாராஷ்டிரா, பெங்கால் போன்ற மாநிலங்களை எடுத்துக் கொண்டால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கலைகள் உள்ளதாகவும், இவை அனைத்தையும் சங்கீத் நாடக அகாடமி, கலை மற்றும் கலாச்சார அமைச்சகம் ஊக்கப்படுத்துவதாகவும், நிறைய இதுபோன்ற கலை நிகழ்ச்சிகளை எடுத்துக் கொண்டு நாட்டுப்புறக் கலைகள், பழங்குடியினர் கலைகள், இயல், இசை, நாடகம் என அனைத்துமே ஒருங்கிணைத்து அதை ஒரு நிகழ்ச்சி நடத்தி அதில் சிறந்து விளங்கும் நபர்களை ஆதரித்து, அரவணைத்து, ஊக்கப்படுத்தி உலகறிய செய்வதற்கு இந்த சங்கீத் கலா நாடக அகாடமி செய்து கொண்டு உள்ளதாகவும் கூறியவர், தற்பொழுது உள்ள தலைமுறையினருக்கு சங்கீத அகாடமி என்றால் ஏதோ விருது வழங்குவது என்றும் அதைப் பற்றி பெரிய புரிதல் என்பது நமது பகுதியில் இல்லை என்றும், இந்த நாளில் சங்கீத் நாட்டிய அகாடமி தலைவர் டாக்டர் சந்தியா பிரேச்சர் அவர்களுக்கு கோவையில் இந்த நிகழ்ச்சிகளை நடத்தியதற்கு நன்றிகளை கூறுவதாகவும், இது போன்று நிகழ்ச்சிகளை கோவையில் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர், சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற பெரு நகரங்களில் மட்டும் இது போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்தி வந்ததாகவும். கோவையில் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை அவர் வைத்தவுடன், உடனடியாக அதை நிறைவேற்ற வேண்டும் என்று உடனடியாக இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து உள்ளார் என தெரிவித்த அவர், அதில் நமது நீலகிரி மாவட்டத்தில் உள்ள தோடர்களின் நடனத்தை கொண்டு வந்து உள்ளதாகவும் தோடர்களின் நடனத்தின் சிறப்பு அப்பகுதி மக்கள் முன்னோர்களின் இந்தக் கலையை தற்பொழுது வரை எடுத்துக் கொண்டு வந்து உள்ளதாகவும், மனிதன் தோன்றிய காலத்தில் முதல் அதன் ஆத்மாவுடன் இணைந்து உள்ளதாகவும், நம் வாழ்நாளில் நடக்கக் கூடிய விஷயங்களை கதையாக கூறுவதற்கும், பாடலாக படிப்பதற்கும், அதை நடனமாக மாற்றி எவ்வளவு பாரம்பரியத்தை நமது வரலாற்றை இந்த பாரம்பரிய கலைகள் கொண்டு வந்து சேர்த்து உள்ளதாகவும், ஒரு காலத்தில் நாம் படிப்பதற்கு புத்தகங்கள் கிடையாது, அதனை சேகரிப்பதற்கு கணினி கிடையாது, நமது புராணங்கள், இதிகாசங்கள், கலாச்சாரங்கள், வரலாறு இவை அனைத்துமே நமக்கு கலை மற்றும் கலாச்சாரத்தின் வாயிலாக திரும்பி பெற்று உள்ளதாகவும், இதை நாம் மனதில் வைத்துக் கொண்டு இந்த கலை நிகழ்ச்சிகளை ரசிக்க வேண்டும் என்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம் என்றும், இந்த நிகழ்ச்சியில் தமிழகத்தின் சேலம், நீலகிரி போன்ற பல்வேறு இடங்களில் இருந்து வந்து உள்ளதாகவும் அவர்கள் நமது பாரம்பரிய கலைகளை நம்மிடத்தில் எடுத்துக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன் வந்து உள்ளதாக தெரிவித்தார். இந்த சிறப்பான சர்வதேச பெண்கள் தினத்தில் சர்வதேச பெண்கள் தினம் வாழ்த்துக்கள் என்றும் இந்த நாளில் மகளிருக்கு மரியாதை செலுத்தி உலகில் மனதளவில் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், இந்த சர்வதேச மகளிர் தினத்தில் பெண்களுக்கு கலை மற்றும் கலாச்சாரம் எவ்வாறு பயன்படுகிறது என்றும், தலை சிறந்த பேச்சு, நடனம் மற்றும் கதை மூலம் வலுவான தகவலை உலகறிய செய்கின்றன என்பதை மனதில் வைத்துக் கொண்டு எவ்வளவு தூரம் சமூகத்தில் கதைகள் மற்றும் நாடகங்கள் மூலம் மாற்றத்தை கொண்டு வந்ததாகவும், நமது விடுதலை போராட்டத்தில் தமிழகத்திலும் நாடகக் கலைஞர்கள் சுதந்தரத்திற்காக பெரிய அளவில் நாடகங்களை அமைத்து, பொதுமக்களை உடனடியாக ஒன்று திரட்ட பயன்பட்டதாகவும், நமது வாழ்நாள் பயணத்தில் கலை மற்றும் கலாச்சாரத்தை நாம் வாழ்நாளில் ஒரு பகுதியாக பார்த்து ரசிக்க வேண்டும் என்றும் கூறினார்.