வெள்ள நிவாரண நிதியை பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் அனுப்ப வேண்டும் - பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.

வெள்ள நிவாரண நிதியை பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கில் அனுப்ப வேண்டும் - பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ. கோவை, சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி தலைமை அலுவலகத்தில் தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ செய்தியாளரிடம் பேசும்போது, கடந்த இரு தினங்களாக காங்கிரஸ் எம்.பி தீரஜ் சாகு அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 300 கோடிக்கு மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வருகின்றன. பணத்தை எண்ணும் மெசின்களே உடையும் நிலையில் உள்ளது. வருமான வரித்துறை அல்லது அமலாக்கத் துறை சோதனையில் கைப்பற்ற பணம் தொடர்பாக விளக்கம் அளிக்க வாய்ப்பு வழங்கப்படும் தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்து இருந்தவருக்கு ராஜ்யசபா எம்.பி பதவி கொடுத்து இருக்கிறது காங்கிரஸ். இந்த பணம் பறிமுதல் செய்யயபட்டது தொடர்பாக இன்டியா கூட்டணியில் இருந்து ஒருவரும் பேசவில்லை. எதற்காக இவ்வளவு பணம் அங்கு வைக்கப்பட்டு உள்ளது.? பெங்களூர், ஜார்கண்ட் உள்ளிட்ட இடங்களில் பணம் கைப்பற்றபட்டு வருகின்றன. வருமான வரித் துறை, அமலாக்கத் துறை ஆகியவற்றை மத்திய அரசு ஏவல் துறையாக வைத்து உள்ளது என எதிர்கட்சிகள் குற்றச்சாட்டு வைக்கின்றன. தற்போது கீரை வாங்கும் இடத்தில் கூட டிஜிட்டல் பரிவர்த்தனை வந்து விட்டது. அவ்வாறு டிஜிட்டல் பரிவர்த்தனைகள் நடக்கும் போது 100 கோடி ரூபாய் பணத்தை வைத்து இருந்ததாக காரணம் என்ன? நமது நாட்டில் எந்த தொழிலை செய்வதற்கும் பாதுகாப்பு இருக்கிறது, அனுமதி இருக்கிறது. ஆனால் நியாமான வழியில் சம்பாதிக்கலாம். எவ்வளவு பணம் வைத்து இருந்தாலும் மத்திய அரசின் ஏஜென்சிகள் சோதனை செய்ய கூடாது என சொல்கின்றனரா? மோடிக்கு எதிராக கூட்டணியை அமைத்து இருக்கிறோம் என்ற ஒவ்வொரு நபருக்கு பின்னாலும் தீரஜ்ஷாவுக்கு நெருக்கமாக இருக்கிறார்கள். இந்த மாதிரி சோதனைகள் நடக்கும் போது திசை திருப்ப எதிர்கட்சிகள் அரிசியலாக்குவது கண்டிக்கத்தக்கது என்று தெரிவித்தார். சென்னையில் மழையினால் மிக் பெரிய பாதிப்பு நடந்து இருக்கிறது. 98 சதவீதம் பணிகள் வேலை முடிந்து இருக்கிறது என அமைச்சர் பேசி இருக்கிறார். மாற்றி மாற்றி பேசி மக்களிடம் ஏமாற்று நாடகத்தை தி.மு.க அரசு நடத்திக் கொண்டு இருக்கிறது. மழை நீர் வடிகால் பணிகள் நடந்தது தொடர்பாக வெள்ளை அறிக்கை தர வேண்டும் என பா.ஜ.க கேட்டு உள்ளது. மாநில அரசு நிவாரணத் தொகை 6000 ரூபாயை ரொக்கமாக ரேசன் கடைகளில் தருவதை தவிர்க்க வேண்டும். பொதுமக்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும். அரசாங்கம் கொடுக்கப்பதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளன அதுவும் பெண்களின் வங்கி கணக்கில் அரசு வழங்க வேண்டும் என கேட்டுகொள்கிறோம் அப்போது தான ஆளுங்கட்சி நிர்வாகிகளின் தொந்தரவு இல்லாமல் பணம் போய் சேறும். மாநில அரசின் அதிகாரிகள், முன் கள பணியாளர்கள், தேசிய பேரிடம். மீட்புக் குழுவினர், தன்னார்வலர்கள் இவர்களுக்கெல்லாம் பாராட்டு தெரிவித்து கொள்கிறேன் என்று கூறினார்.