தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவில் அமைந்துள்ளது.

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே குச்சனூரில் நூற்றாண்டு பழமை வாய்ந்த சுயம்பு சனீஸ்வர பகவான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த திருக்கோவிலில் நிர்வாக பொறுப்பினை ஆரம்ப காலத்தில் அறங்காவலர் குடும்பத்தினர்கள் செய்து வந்தனர். கடந்த 2003 ஆம் ஆண்டு தமிழக அரசு சார்பில் இந்து சமய அறநிலைய துறையினர் கோவில் நிர்வாகப் பொறுப்பினை எடுத்துக்கொண்டு அன்று முதல் இன்று வரை செய்து வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் கோவில் நிர்வாக பொறுப்பினை அறங்காவலர் குடும்பத்தினரிடம் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் அறங்காவலர் குடும்பத்தினர் வழக்கு தொடர்ந்து மீண்டும் பொறுப்பை ஏற்றுக் கொள்ள உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தத் தீர்ப்பினை அமல்படுத்தி கோவில் நிர்வாக பொறுப்பினை அறங்காவலர் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என கூறி இந்து சமய அறநிலைத்துறையினர் அலுவலகத்தை அறங்காவலர் குடும்பத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். குச்சனூர் சனீஸ்வர பகவான் திருக்கோவிலில் இரண்டுமணி நேரமாக நடந்த இந்த முற்றுகை போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.