ஆன்மீகப் பொருள்களின் சங்கமம் கிரி ஷோரூம் சென்னை அண்ணா நகரில் கிளையை நிறுவியது!

ஆன்மீக மற்றும் இந்து சமயம் சார்ந்த பொருட்களுக்கான இந்தியாவின் நம்பகமான பிராண்டாக கிரி விளங்கி வருகிறது. இது தனது ஷோ ரூம் கிளையை சென்னை அண்ணாநகர் முதல் அவெனியூவில் திறந்தது. இந்த திறப்பு விழாவிற்கு ஆன்மீக சொற்பொழிவாளர் திரைப்பட இயக்குனர் மற்றும் எழுத்தாளர் துஷ்யந்த் ஸ்ரீதர் வருகை தந்து திறந்து வைத்து வாழ்த்துரை வழங்கினார். தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்க இயக்குனர் சேது சொக்கலிங்கம் சிறப்புரை ஆற்றினார். அண்ணா நகரில் ஷோ ரூம் திறப்பது சென்னையில் தன் சேவையை விரிவுபடுத்திக் கொள்வதற்கும் மற்றும் பாரம்பரிய பாரதிய ஆன்மீக மற்றும் சமயம் சார்ந்த படைப்புகள் அனைத்தும் அனைவரையும் சென்றடைய வேண்டும் என்ற வகையில் கிரி இந்த ஷோ ரூமை திறந்துள்ளது. இது பாரதிய கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்கான கிரியின் ஒரு அர்பணிப் பாகும் என்று நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டது. வரவிருக்கும் பண்டிகை காலத்திற்காக இந்த ஷோரூம் அனைத்து ஆன்மீகம் மற்றும் கலாச்சார தேவைகளை பூர்த்தி செய்வதற்கு சரியான ஓர் இடமாகும். பூஜை தேவைகளுக்கான அனைத்து பொருள்கள், சிலைகள், ஆர்கானிக் உணவுப் பொருள்கள் மற்றும் பாரம்பரிய உடைகள் அனைத்தும் இந்த ஷோரூமில் கிடைக்கும் என கிரி டிரேடிங் ஏஜென்சி பிரைவேட் லிமிடெட் இயக்குனர் சாரதா பிரகாஷ் குறிப்பிட்டார். இந்த புதிய ஷோ ரூம் தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்திருக்கும். இனிவரும் விழா காலங்களிலும் ஆன்மீக வாடிக்கையாளர்களின் அனைத்து தேவைகளையும் கிரி பூர்த்தி செய்ய உதவியாக இருக்கும் என்றும் மேலும் அவர் குறிப்பிட்டார்.