சத்தியமங்கலத்தில் போலீஸ் ஸ்டேஷனுக்கு பூஜை - கல்லா கட்டவா? குற்றங்கள் குறைய வேண்டியா? சமூக ஆர்வலர்கள் கேள்வி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் வெள்ளிக்கிழமை தோறும் பூஜை செய்து, திருஷ்டி கழிக்கும் போலீசார். பொதுவாக போலீஸ் ஸ்டேஷன்களில் பல்வேறு தரப்பு மக்களும் சாதி, சமய, வேறுபாடின்றி புகார் கொடுக்கவும், பிரச்சினைகளை தீர்க்கவும் வந்து செல்கின்றனர். கடவுளாளே தீர்க்க முடியாத பிரச்சினைகளை போலீசார் தீர்த்து வைப்பார்கள் என நம்பி பொது மக்கள் போலீஸ் ஸ்டேஷன் வருகின்றனர். ஆனால் போலீசாரே ஸ்டேஷனுக்கு கடந்த 20ஆண்டுகளுக்கும் மேலாக வெள்ளிக்கிழமை தோறும் இரவு தீபாரதனை காட்டி பூஜை செய்து திருஷ்டி கழித்து தேங்காய் உடைக்கின்றனர். எதற்காக என்று பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது? "அதிகாரிகளுக்கு மாமூல் குவிய வேண்டியா? "குற்ற சம்பவங்கள் குறைய வேண்டியா? அல்லது போலீஸ் ஸ்டேஷனுக்கு பாதுகாப்பு இல்லையா? எந்த கணக்கில் எடுத்து கொள்வது? அரசு அலுவலகங்களில் சாமி, படங்கள் வைத்து வழிபாடு செய்ய கூடாது என 1968 ஏப்ரல் 29ம் தேதி தமிழக அரசு உத்தரவு போட்டு இருக்கிறது. இதையெல்லாம் போலீசாரே பின்பற்றவில்லை என்றால், என்ன செய்வது? பூஜை செய்வதை பார்த்து மற்ற மதத்தினர் நாங்களும் சாம்பிராணி போடுவோம், ஜெபிப்போம் என வந்தால் போலீசார் அனுமதிப்பார்களா? எனவே இது போன்ற சம்பவங்களால் திராவிட மாடல் அரசிற்கு தலை குனிவு தான் ஏற்படும் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டு கின்றனர்.