100% தேர்ச்சி பெற்ற சிறந்த பள்ளிகளுக்கான விருது! அமைச்சர் உதயநிதி வழங்கினார்!!!

2023-2024-ஆம் கல்வி ஆண்டில் நடைபெற்ற பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி அடைய அர்ப்பணிப்புடன் பணிபுரிந்த பள்ளி நிர்வாகம் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களை பாராட்டி சான்றிதழ்களை மாண்புமிகு விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி நிதி வழங்கினார். இதில் ஓசூரில் உள்ள ஆதித்யா மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் நரேந்திர பாபு உள்ளிட்ட பள்ளி நிர்வாகத்தினர் தமிழக அரசின் பாராட்டு சான்றிதழ்களை பெற்றனர். இவ்விழாவில் அமைச்சர்கள் மகேஷ் அன்பில் பொய்யாமொழி, மா. சுப்பிரமணி, சேகர்பாபு மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சென்னை மாநகர மேயர் பிரியா, தமிழ்நாட்டு பாடநூல் கழக தலைவர் ஐ. லியோனி ,தமிழ்நாடுபெற்றோர் ஆசிரியர் கழகத் துணைத் தலைவர் முத்துக்குமார் உள்ளிட்ட கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஊட்டியில் உள்ள ஹில் போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,0 அரியலூர் மாடர்ன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள எஸ். எஸ். வி. எம். விதான் பள்ளி, கள்ளக்குறிச்சி மாவட்டம் எளவனாசூர் கோட்டையில் உள்ள பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள பெருவாரியான பள்ளிகள் 100% தேர்ச்சி அடைந்ததற்கான பாராட்டு சான்றிதழ்களை பெற்றனர். விளையாட்டு போட்டியில் வென்ற மாணவர்களுக்கும், அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கும் இவ்விழாவில் தமிழ்நாடு அரசு சார்பாக பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.