விபத்தில்லா சென்னை ஆகஸ்ட் 26-ல் கடைப்பிடிப்பு!

விபத்தில்லா சென்னை ஆகஸ்ட் 26-ல் கடைப்பிடிப்பு! அதை முன்னிட்டு அபிராமபுரம் போக்குவரத்து துறை 30 மாணவிகளுக்கு ஹெல்மெட் வழங்கியது. சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள ராணி மெய்யம்மை மேல்நிலைப்பள்ளியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் விபத்தில்லா சென்னை நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியை அமுதா தலைமை தாங்கினார். மயிலாப்பூர் சரக போக்குவரத்து காவல்துறை ஆணையர் சிவகுமார் முன்னிலை வைத்து சிறப்புரை ஆற்றினார். அபிராமபுரம் சரக போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் பாலகிருஷ்ணன் பிள்ளை, பத்திரிக்கையாளர் மற்றும் சமூக ஆர்வலர் சி.தமிழ்ச்செல்வன் ஆகியோர் பங்கேற்று போக்குவரத்து விழிப்புணர் கருத்துகளை எடுத்துரைத்தனர். நிகழ்ச்சியில் பள்ளியின் 30 மாணவிகளுக்கு விலையில்லா தலைக்கவசம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் போக்குவரத்து காவலர்கள் முத்துராஜ் பிரபாகர் கதிரவன் மற்றும் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு ஒருங்கிணைப்பு செய்தனர். நிகழ்ச்சியின் நிறைவில் சாலை போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிப்போம் என்ற உறுதி மொழியினை மாணவிகள் உட்பட நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் எடுத்துக்கொண்டனர்.