தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, இராமநாதபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கி வருகிறது

வைகை அணையில் மீன் பிடிப்பதற்காக மீன்வளத்துறை சார்பில் ஒப்பந்த அடிப்படையில் தனியாருக்கு டெண்டர்கள் விடப்பட்டு மீன்கள் பிடிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் வைகை அணையின் நீர் பிடிப்பு பகுதிகளில் மீன்பிடிப்பதற்காக இறைச்சி கழிவுகளை கொட்டி தண்ணீர் துர்நாற்றம் வீசுவதாக புகார் எழுந்த நிலையில் இது குறித்து வைகை அணையில் மீன் பிடிக்கும் மீனவர் கூறுகையில் வைகை அணையில் கழிவுகள் கொட்டப்படுவதாக கூறுவது பொய்யான தகவல், தினமும் காலை 4 மணி முதல் 10 மணி வரை தண்ணிரில் இருக்கிறேன் எனக்கு தெரிந்த வரையில் யாரும் இங்கு கழிவுகளை கொட்டப்படுவதில்லை என்று கூறினார். பின்னர் இது குறித்து மீன்களை சுத்தம் செய்யும் பெண் கூறுகையில் நாங்கள் இந்தப் பகுதியில் தான் வசித்து வருகிறோம் இந்த தண்ணீரை தான் குடித்து வருகிறோம் அப்படி இருக்கும் நிலையில் இந்த தண்ணீரை எப்படி நாங்கள் அசுத்தப்படுத்துவோம் என்றும் நாங்கள் வேலை செய்யும் இடத்தை சுத்தமாக வைத்துள்ளோம் என்றும் மற்றவர்கள் அசுத்தப்படுத்தினால் கூட அதை நாங்கள் கண்டிப்போம் என்று கூறினார். பின்னர் இது குறித்து மீன் பிடிக்கும் ஒப்பந்ததாரர் கூறுகையில் இங்கு கழிவுகள் கொட்டப்படுவதில்லை என்றும் அணையின் அளவு அதிகரிக்கும் போது மீன்கள் வரத்து குறைவதால் சிலருக்கு மீன்கள் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படுவதாகும் இதன் காரணமாக காழ்ப்புணர்ச்சியால் இதுபோன்ற வதந்திகள் பரப்பப்பட்டு வருவதாக கூறினார். மேலும் வைகை அணையின் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தங்களுக்கு பல தடைகள் கொடுப்பதாகவும் இது குறித்து மீன்வளத்துறையிடம் புகார் தெரிவித்துள்ளோம் என்று கூறினார் பொதுப்பணித்துறையில் 84 அதிகாரிகள் இருக்கின்றனர் நாங்கள் கழிவுகளை அணையில் கொட்டினால் அவர்கள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கட்டும் என்றும் ஒரு கோடி செலவு செய்து டெண்டர் எடுக்கப்பட்ட பின் இப்பகுதியில் பொதுமக்களுக்கும் வியாபாரிகளுக்கும் முறையாக மீன்களை வழங்கி வருகிறோம். கடந்த 30 ஆண்டுகளில் அரசு மின் பிடித்த போது ஒரு கோடி ரூபாய் கூட வரவு வந்ததில்லை என்றும் தற்போது ஆண்டுக்கு ஒரு கோடி வருவாய் வருகிறது என்று கூறினார் இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எடுத்தனர்.