சென்னையில் குறைப் பிரசவ குழந்தைகள் பராமரிப்பு பற்றிய கருத்தரங்கு!

சென்னை நுங்கம்பாக்கம் காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனை நியோனாட்டாலஜி துறை, பெரினாட்டாலஜி துறை குறைப்பிரசவ குழந்தைக ள் பராமரிப்பு பற்றிய கருத்தரங்கு ஒன்றினை சென்னை குவாலிட்டி இன் சபரி கிராண்ட் ஓட்டலில் நடத்தியது. இதில் மருத்துவ இயக்குனர் டாக்டர் ஜனனி சங்கர், மருத்துவமனையின் தலைமை நிர்வாக அலுவலர் டாக்டர் சந்திரகுமார், டாக்டர் இரவிசங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். அப்போது வைட்டமின் பி மற்றும் சி குறைவு, ரத்த சோகை, கர்ப்பகால உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரகப் பாதை தொற்று உள்ளிட்ட பிரச்சனைகள் குறை பிரசவத்திற்கு முக்கிய காரணிகளாக இருக்கின்றன. இந்த காலகட்டத்தில் தாயின் பங்களிப்பு மிக பெரும் அவசியமாகும். குறிப்பாக மருத்துவர்கள் ஆலோசனைப்படி தாய் குழந்தைகளை பாதுகாப்பதில் முக்கிய பங்காற்ற வேண்டும் என்று குறிப்பிட்டனர். கருத்தரங்கில் காஞ்சி காமகோடி குழந்தைகள் மருத்துவமனையில் பயன் பெற்ற குறைப் பிரசவ குழந்தைகளின் பெற்றோர்கள் தாங்கள் பயனடைந்த விவரத்தை நேரடியாகவும் காணொளி காட்சி மூலமாகவும் விவரித்தனர்.